British National Insurance Act

பிரிட்டிஷ் தேசியக் காப்புறுதிச் சட்டம்

தமிழ் விளக்கம்

பிரிட்டிஷ் பிரதமராக இருந்த லாயிட் ஜார்ஜ் (1863-1945), முதியோர் காப்பீடு, வேலையின்மை இழப்பீடு, மருத்துவக்காப்பீடு, இறந்துவிட்ட தொழிலாளர்களின் குழந்தைகளுக்கான காப்பீடு போன்ற சமூகப் பாதுகாப்பு திட்டங்கள் உருவாகக் காரணமாயிருந்தார். அமெரிக்க சமூகப் பாதுகாப்பு சட்டத்தில் இதையெல்லாம் உள்ளடக்கி அதை மேலும் மேம்படுத்தினார்கள். இரண்டாம் உலகப்போருக்கு பின் பிரிட்டனின் தேசியக் காப்புறுதிச் சட்டம் மேம்படுத்தப்பட்டு, பிவரிட்ஜ் அறிக்கையால் தேசிய சமூகப் பாதுகாப்புச் சட்டமாக மேம்படுத்தப்பட்டது.

English

The 1911 social security legislation in Great Britain devised by Lloyd George that provided old-age insurance; unemployment compensation; sickness insurance; and, in 1925, survivors insurance for most workers. Many of the features of the National Insurance Act were emulated in the U.S. Social Security Act. The National Insurance Act was replaced by the post– World War II social security system recommended in the Beveridge Report.