Brown v. Board of Education
கல்வி நிலையங்களில் இனப்பாகுபாட்டை ஒழித்த தீர்ப்பு
தமிழ் விளக்கம்
ஆலிவர் புரவுன் என்ற கறுப்பின வெல்டர், கறுப்பினக் குழந்தைகள் வெள்ளையினக் குழந்தைகள் படிக்கும் பள்ளிகளில் சேர முடியாததை எதிர்த்துத் தொடர்ந்த வழக்கில் முதல் வாதி. 1950 தொடங்கிய இந்த வழக்கு, 1954 இல் ஒன்பது நீதிபதிகளைக் கொண்ட அமெரிக்க உச்சநீதிமன்ற அமர்வு, ஒருமித்ததாக, 'பள்ளிகளில் இனப்பாகுபாட்டை, ஒதுக்குதலை நியாயப்படுத்தும் மாநிலச் சட்டங்கள் அனைத்தும் அரசியல் சாசனத்திற்கு முரணானவை' என்ற தீர்ப்பை வழங்கியது. அதற்கு முன்னாள் பிளசி Vs பெர்குசன் 1896 வழக்கில், இனப்பாகுபாட்டை நியாயப்படுத்தி வழங்கிய உச்சநீதிமன்றத் தீர்ப்பை இது செல்லாததாக்கியது. இந்த தீர்ப்பிற்குப் பிறகு கல்வி நிலையங்களில் இனப்பாகுபாடு சட்டவிரோதமாகியது.
English
The 1954 U.S. Supreme Court ruling that the“separate but equal”interpretation of the 14th Amendment was unconstitutional and that racial segregation of public schools was illegal. See also Plessy v. Ferguson.