budget
வரவு செலவுத் திட்டம், நிதி அறிக்கை
தமிழ் விளக்கம்
நிதியறிக்கை என்பது ஒரு நிறுவனத்தில் அல்லது அரசில் இனி வரும் ஆண்டில் அல்லது குறிப்பிட்ட காலப்பகுதியில் ஏற்பட இருக்கும் வரவு செலவுகளுக்கு ஏற்றவாறு, குறிப்பிட்ட நோக்கங்களுக்காக திட்டமிட்டுப் பணம், பொருள் முதலிவற்றை முறையாகக் கையாளுவதற்கான வரைவு ஆகும். இதனை ஆங்கிலத்தில் பட்ஜெட் (budget) என்னும் பிரெஞ்சு மொழிவழி பெற்ற சொல்லால் (bougette, purse) குறிப்பர். வரவு செலவுத் திட்டம், நிதியறிக்கை என்பது மிக முக்கியமான நிர்வாகச் செயல்பாடு. இது 1. ஒரு நிறுவனத்தின் குறிக்கோள்களை அடைய உதவும் செயல் திட்டமாகவும் (குறிப்பிட்ட பணிகளுக்கு நிதிஒதுக்கீடு செய்வதால்) 2. நிறுவனச் செயல்பாட்டை மதிப்பிடும் அளவுகோளாகவும் (ஒவ்வொரு செயலுக்கும் போதுமான நிதி ஒதுக்கீடு செய்து அது முறையாக செலவு செய்யப்பட்டிருக்கின்றதா என்று மதிப்பீடு செய்வதால்) 3. எதிர்பார்த்த இடர்ப்பாடுகளை (இடர்ப்பாடுகளுக்கு ஏற்றபடி நிதி பஒதுக்கீடு செய்வதால்) சமாளிக்கவும் உதவுகிறது.
English
An itemized list of the amount of all estimated revenues a social agency or organization anticipates receiving, and the delineation of the amount of all estimated costs and expenses necessary to operate the organization; a statement of probable revenues and expenditures during a specified period.