Bureau of the Census, U.S.

(அமெரிக்க அரசின்) மக்கள் தொகைக் கணக்கெடுப்பு அலுவலகம்

தமிழ் விளக்கம்

ஒவ்வொரு பத்தாண்டுகளுக்கு ஒருமுறை அமெரிக்க மக்களைப் பற்றிய கணக்கெடுப்பு நடத்தப்படவேண்டுமென்ற அமெரிக்க அரசியல் நிர்ணயச் சட்ட வரையறைக்கிணங்க மக்கள்தொகைக் கணக்கெடுப்பு நடத்தும் ஆணையம். இதன் தலைமை அலுவலகம் மாரிலண்ட் மாநில சூட்லண்ட் நகரத்திலிருந்து செயல்படுகிறது. ஒவ்வொரு பத்தாண்டிற்கும் தனிநபர்கள், மக்கள் குழுக்கள் மற்றும் சமூகப் போக்குகள் குறித்து தேசிய அளவில் கணக்கெடுப்பு நடத்தி, அதை ஆய்வுக்குட்படுத்தி வெளியிடுவது இந்த ஆணையத்தின் முக்கிய பணியாகும்.

English

The bureau functioning within the U.S. Department of Commerce that carries out the constitutional requirement that all the people in the nation be counted every decade. The bureau, centered in Suitland, Maryland, conducts surveys and analyzes and disseminates resulting data about individuals, population groups, and social trends.