bureaucracy

உத்தியோகவாதம், அதிகாரத்துவம், ஆளும் வகுப்பு, நிர்வாகக் கட்டுப்பாடுகள்

தமிழ் விளக்கம்

அதிகாரத்துவம் என்பது சமூகவியலிலும் அரசியல் அறிவியலிலும், நிர்வாகம் மற்றும் அதையொட்டிய (சட்ட) விதிகள் எப்படி கையாளப்படுகின்றன / ஒழுங்கமைக்கப்படுகின்றன என்பதைக் குறிக்கும் ஒரு கருத்தாக்கம் ஆகும். அதிகாரத்துவத்தை நான்கு மையக் கருத்தாக்கங்கள் வழியாகப் புரிந்துகொள்ளலாம். 1. நிர்வாகத்தில் இருக்கும் மனிதர்கள் மற்றும் அலுவலகங்களுக்கு இடையே நன்கு வரையறை செய்யப்பட்ட பணிப்பகுப்பு அல்லது கடமைகள். 2. முறையாகப் பணியிலமார்த்தப்பட்டு நிரந்தரமாகப் பணி செய்பவர்களைக் கொண்ட மனிதவள அமைப்பு, 3. அலுவலகங்களுக்கு இடையேயும், அலுவலகத்திற்கு உள்ளேயும், அதிகாரமும் அந்தஸ்தும் உரிய வகையில் பகிர்ந்தளிக்கப்பட்டிருக்கும் வகையில் அமைந்த அதிகார அடுக்குவரிசை, மற்றும் 4. பணியாளர்களுக்கிடையே முறைப்படியான தகவல் தொடர்பு மற்றும் ஒத்துழைப்பு கோரும் நெறிமுறைகளின்படி (Protocol -நெறிமுறை என்பது ஒரு நிறுவனத்தில் பணியாளர் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்று அந்த நிர்வாகத்தால் நடைமுறைப்படுத்தப்படும் விதிகளாகும்) .அமைந்த வலைப்பின்னல் தொடர்புகள் அதிகாரத்துவத்தின் இலக்கணமாகும்.
அரசாங்கங்கள், இராணுவம், பெருநிறுவனங்கள், அரசு சாரா அமைப்புகள் (NGO), அரசாங்கத்திடை அமைப்புகள் (IGO), மருத்துவமனைகள், நீதிமன்றங்கள், அமைச்சரகங்கள், சமூக மன்றங்கள், விளையாட்டு அமைப்புகள், தொழில்முறை கழகங்கள், மற்றும் கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றை அன்றாட வாழ்க்கையின் அதிகாரத்துவங்களுக்கு உதாரணமாய் கூறலாம்.

English

A form of social organization whose distinctive characteristics include a task-specific division of labor; a vertical hierarchy with power centered at the top; clearly defined rules; formalized channels of communication; and selection, promotion, compensation, and retention based on technical competence. See also technocrat, apparatchik, and adhocracy.