bureaus of public assistance

பொது உதவிக்கான அமைப்புகள்

தமிழ் விளக்கம்

அமெரிக்காவிலுள்ள உள்ளாட்சி, மாநில, மைய அரசு நிதி உதவிகொண்டு, உதவி தேவைப்படும் குடும்பங்களுக்கு சமூகசேவை மற்றும் பொருளாதார உதவிகளை வழங்கும், நலத்துறை, சமூகசேவைத் துறை, சுகாதாரம் மற்றும் மனித சேவைகளுக்கான துறை என்று பல்வேறு பெயர்களில் செயல்படும் அலுவலகங்களைக் குறிக்கும் வார்த்தை. இந்த அலுவலகங்கள் ஆதரவு தேவைப்படும் குழந்தைகள் உள்ள குடும்பத்திற்கு உதவுதல் மற்றும் பொது உதவி (நடைமுறையிலுள்ள சமூகப்பதுகாப்பு திட்டங்கள் மூலம் பயனடையாத, விடுபட்ட அல்லது அவசர கால உதவி) போன்ற திட்டங்களைச் செயல்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கின்றது.

English

State and county organizations that administer programs to provide economic and social services to needy families; funded from local, state, and federal revenues, these bureaus often help administer such programs as Aid to Families with Dependent Children (AFDC) and general assistance (GA). In some jurisdictions, these bureaus are known as the department of welfare, the department of social services, or the bureau of health and human services.