Canadian Association of Schools of Social Work (CASSW)

கனடிய சமூகப்பணிக் கல்லூரிகளின் கூட்டமைப்பு

தமிழ் விளக்கம்

கனடாவில் சமூகப்பணி போதிக்கும் கல்லூரிகளுக்கிடையே தொடர்புகளை ஏற்படுத்தவும், கல்லூரிகளின் தர நிலைப்படுத்தலுக்கும், அங்கீகாரம் வழங்கவும் செயல்படுகின்ற கூட்டமைப்பு.
பார்க்க: CASW - கனடிய சமூகப் பணியாளர்கள் சங்கம் - 1926 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட கனடாவின் தேர்ச்சிபெற்ற சமூகப்பணியாளர்களின் தொழில்முறை சார்ந்த அமைப்பு. தொழில் சார்ந்த நிபுணத்துவ மேம்பாட்டிற்காக கல்வித்திட்டங்கள், கருத்தரங்குகள், பயிற்சிகள், பிரசுரங்கள் வெளியீடு போன்ற செயல்களைச் செய்கிறது. சமூகப்பணிக்கான தொழில் நெறிகளை வகுப்பதும், அதை அமுல்படுத்துவதும் இந்த அமைப்பின் முக்கிய செயல்கள்.

English

The organization whose membership comprises the professional schools of social work in Canada and whose purpose is to facilitate communication among schools and to maintain standards through accreditation reviews.