cancer

புற்று நோய், வேகமாக வளரக்கூடிய கெடுதி விளைவிக்கின்ற திசுக்களாலான கட்டி, கடகம், பிளவை, கடக ராசி

தமிழ் விளக்கம்

உடலுக்கு அடிப்படையாக உள்ள உயிரணுக்களைப் (செல்கள்) பாதிக்கும் நோயைத்தான் புற்றுநோய் அல்லது புற்றுத்திசு உடற்கட்டி என்கிறோம். உடலானது பல வகையான செல்களால் உருவாக்கப்பெற்றது. இயல்பாகவே உடலில் உள்ள செல்கள் வளர்ந்து பிரிந்து, உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளத் தேவையான அளவுக்குப் பல செல்களை உருவாக்குகிறது. இந்தச் சீரான பணியில் ஏதேனும் தவறு ஏற்படும்போது, புதிய உயிரணுக்கள் அதிகமாக உருவாகிவிடுகின்றன. சில வேளைகளில், உடலுக்குத் தேவையற்ற பல புதிய செல்கள் தோன்றுகின்றன. இந்த அதிகப்படியான உயிரணுக்கள் உடலில் கட்டியாகத் தோன்றுகின்றன அல்லது உடலில் உள்ள பழைய வயதடைந்த செல்கள், இறக்க வேண்டிய நேரத்தில் இறந்து வெளியேறாமல் உடலிலேயே மிகுபடுகின்றன. இவ்வாறான அதிகப்படியான செல்கள், கட்டியாகி Tumor எனப்படும் திசுக்களின் கூட்டை ஏற்படுத்துகிறது. எல்லாக் கட்டிகளும் (கழலைகள் -Tumor) புற்று நோய்க் கட்டிகளல்ல. இக்கட்டிகள் (கழலைகள) தீங்கில்லாக் கட்டிகள் (benign tumors) மற்றும் கேடுவிளைவிக்கும் கட்டிகள் (malignant tumors) என இருவகைப்படும்.
தீங்கில்லாக் கழலைகள் புற்றுநோய் அல்ல. அவற்றைப் பொதுவாக உடலிலிருந்து நீக்கி விடலாம். பெரும்பாலான நிகழ்வுகளில் அவற்றை நீக்கிய பின்பு, மீண்டும் தோன்றுவது இல்லை. தீங்கில்லாக் கழலைகளில் உள்ள செல்கள் மற்ற உடல் பகுதிகளுக்குப் பரவுவதில்லை. மாறாகக் கேடு விளைவிக்கும் கழலைகள் என்பவை புற்று நோயாகும். கேடு விளைவிக்கும் கழலையில் உள்ள செல்கள் இயல்புக்கு மாறாகவும், எந்த கட்டுப்பாடுமின்றியும் பிரிவுற்றுப் பெருகும். சிகிச்சையற்ற நிலையில் புற்றுநோய் உயிரணுக்கள் கட்டுப்பாடின்றி வளர்கின்றன. அவை சுற்றியுள்ள மற்ற திசுக்களை ஆக்கிரமித்து அழிக்கின்றன. ரத்தம் மற்றும் நிணநீர் வழியாக உடலின் மற்ற பகுதிகளுக்கும் பரவுகின்றன. இதனால், உறுப்பின் இயக்கங்கள் பாதிக்கப்பட்டு இறப்பு ஏற்படுகிறது. புற்றுநோய் ஒரு தொற்றுநோய் அல்ல. ஆண்களுக்கு நுரையீரல், வயிறு, குடல், உணவுக்குழாய், ப்ராஸ்ட்ரேட் சுரப்பிகளிலும், பெண்களுக்கு மார்பகம், நுரையீரல், வயிறு, குடல், கர்ப்பப்பை வாய் ஆகியவற்றிலும் அதிகமாகப் புற்றுநோய் வருகிறது. புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரிப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

English

A malignant tumor; uncontrolled growth of abnormal cells. Unlike normal body cells, cancer cells do not stop growing when in contact with other cells and thus may spread in the body. The cells spread either by invading surrounding tissue or by metastasis. Cancer cells compete with normal tissue for nutrients and eventually kill normal cells by depriving them of needed nutrition. Causes, specific symptoms, prognosis, and treatment vary considerably. See also carcinoma, sarcoma, leukemia, and lymphoma.