CAP
சமூகச் செயல்பாட்டுத் திட்டம்
தமிழ் விளக்கம்
- சமூகப் பொருளாதார உதவிகள் மூலம் வறுமையான சமூகங்களில் வறுமையையும், அதை நிலைத்திருக்கவைக்கும் காரணிகளையும் அகற்றவும், மாற்று வழிகளைக் கையாளவும், ஏழ்மையான குடியிருப்புப் பகுதிகளில் பொருளாதார வாய்ப்புகளை உருவாக்கச் செயல்படும் அலுவலகம். 1964 ஆம் ஆண்டு 'வறுமைக்கு எதிரான யுத்தம்' என்ற கருத்தின் அடிப்படையில் தொடங்கப்பட்ட திட்டத்தின் நீட்சியாக, 1965 ஆம் ஆண்டில் குடியிருப்புகள் சார்ந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. பொருளாதார வாய்ப்புக்கான அலுவலகம் செயற்படுத்திய 'ஆற்றலோடு தொடங்குவோம்' (Head Start) மற்றும் சட்ட உதவித் திட்டங்கள் ஒருங்கிணைக்கப்பட்டு, குடியிருப்புகள் சார்ந்த அமைப்புகளிடம் ஒப்படைக்கப்பட்டு, அவைகள் சுதந்திரமாகச் செயல்படவும், தங்கள் பிரச்சனைகளைத் தீர்க்க புதுவழி காணவும் தூண்டப்பட்டனர். இவ்வாறு தூண்டப்பட்ட அடித்தள சமுதாயச் செயல்பாட்டுத் (Community Action Program) திட்டம், 3000 க்கும் அதிகமான ஏழைக்குடியிருப்புகளில் உளவளப் (counseling) பணி செய்தும், வேலை வாய்ப்புக்களுக்கான வழிகாட்டியும், சட்ட ஆலோசனை கொடுத்தும், குழந்தைகள் நலன் மற்றும் மருத்துவ சேவை செய்தும் திறம்படச் செயலாற்றின.
English
See Community Action Program (CAP).