capitalism

முதலாளித்துவம், தனியுடைமை, முதலீட்டாட்சிச்சூழல்

தமிழ் விளக்கம்

முதலாளித்துவம் என்பது, உற்பத்திச் சாதனங்கள் பெரும்பாலும் தனி நபர்ளின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் ஒரு பொருளியல் முறையாகும். அத்துடன் இம்முறையில், முதலீடு, விநியோகம், வருமானம், உற்பத்திப், பொருள்களுக்கான விலை நிர்ணயம், சேவைகள் என்பன சந்தைப் பொருளாதாரத்தினால் தீர்மானிக்கப்படுகின்றன. இந்த முறையில் உற்பத்திக் கருவிகளான மூலப் பொருட்கள், நிலம் மற்றும் பணம் மீது தனிநபர்களுக்கோ, தனிநபர்களாலோ அல்லது குழுவாலோ சட்ட ரீதியாக உருவாக்கப்பட்ட நிறுவனங்களுக்கோ உரிமைகள் கொடுக்கப்படுகின்றன. முதலாளித்துவச் செயற்பாடுகள், 16 ஆம் நூற்றாண்டுக்கும் 19 ஆம் நூற்றாண்டுக்கும் இடையில் ஐரோப்பாவில் நிறுவனப்படுத்தப்பட்டது. வணிக முதலாளித்துவத்தின் தொடக்க வடிவங்கள் மத்திய காலத்தில் சிறப்புற்று விளங்கின. நிலப்பிரபுத்துவத்தின் முடிவுக்குப் பின்னர், முதலாளித்துவம் மேலை நாடுகளில் முதன்மை பெற்று விளங்கியது. முதலாளித்துவக் கண்ணோட்டம், இங்கிலாந்திலிருந்து படிப்படியாக அரசியல் மற்றும் பண்பாட்டு எல்லைகளைக் கடந்து பிற இடங்களுக்கும் பரவியது. உலகம் முழுவதிலும் தொழில்மயமாக்கத்துக்கான முக்கிய காரணியாக, 19 ஆம், 20 ஆம் நூற்றாண்டுகளில் முதலாளித்துவம் விளங்கியது.
கால அடிப்படையிலும், புவியியல், அரசியல், பண்பாடு ஆகியவற்றின் அடிப்படையிலும், முதலாளித்துவம் பலவேறுபாடுகளுடன் உலகெங்கும் வியாபித்திருக்கின்றது. பல நாடுகளில் இது செயல்படும் பாங்கைப் பொறுத்து இதைக் கலப்புப் பொருளாதாரம் என்று அழைப்பதே பொருத்தம் எனச் சிலர் கருதுகின்றனர்.

English

An economic system in which the production and distribution of goods and services for consumers are controlled through private ownership and open competition.