cardiovascular disease

இருதய இரத்தக் குழாய்கள் சம்பந்தப்பட்ட நோய்

தமிழ் விளக்கம்

இதயக் குழலியல் நோய் என்பது இதயமும் மற்றும் இதயத்தோடு தொடர்புடைய இரத்த நாளங்களும் (தமனிகள் - arteries, இரத்த தந்துகிகள் (இரத்த நுண் குழாய் - capillaries, இரத்த சிரைகள் - veins) சம்பந்தப்பட்ட நோயாகும். இதயத்தில் உண்டாகும் கோளாறுகள், மூளை மற்றும் சிறுநீரகம் சம்பந்தப்பட்ட இரத்தக் குழாய்களில் ஏற்படும் கோளாறுகள், தமனிகளில் ஏற்படும் கோளாறுகள் போன்ற பலவற்றை உள்ளடக்கியது. இதயக் குழலியல் நோய்களுக்கு பலகாரணங்கள் இருந்தாலும், இரத்தத் தமனிகளில் குறிப்பாக பெருந்தமணியில் கொழுப்பு படிந்து தடிப்பதாலும், உயர் இரத்த அழுத்தமும் முக்கிய காரணங்களாகின்றன. மேலும் வயதாவதால் உடற்தொழிலியலும் (physiology), உருவ அமைப்பும் மாறுவதால் அது இதயக் குழலிகளில் மாற்றங்களை உருவாக்கி ஆரோக்கியமானவர்களுக்குக் கூட எளிதில் பாதிப்படையும் தன்மையை உருவாக்குகிறது

English

Disease of the heart or blood vessels, responsible for nearly 50 percent of all deaths in the United States. Those at greatest risk are smokers and men with elevated blood pressure and serum cholesterol levels. Other risk factors are heredity, obesity, stress, and physical inactivity.