career counseling

வாழ்க்கைத் தொழிலுக்கான / பிழைப்பிற்கான ஆலோசனை

தமிழ் விளக்கம்

வாழ்க்கைக்கான தொழிலைத் தேர்ந்தெடுக்கவோ, இல்லை ஒரு தொழிலில் உள்ள வாய்ப்புக்களை விரிவாக்கிக் கொள்ளவோ அல்லது தனக்குப் பொருத்தமான மேற்கல்வி பயிலவோ விரும்பும் சுய முன்னேற்ற நாட்டமுடையவர்களுக்கு, சமூகப்பணியாளர்கள், கல்வித்துறையினர், மற்றும் பிற வழிகாட்டுனர்கள் வழங்கும் ஆலோசனை, உதவி, மற்றும் வழிகாட்டல். போதுமான தகவல்களையும் மற்றும் தொடர்புகளையும் ஏற்படுத்திக் கொடுக்கும் வழிமுறை. இது பெரும்பாலும் சுய முன்னேற்ற நாட்டமுடைய பள்ளி, கல்லூரி மாணவர்களின் திறமைகளையும் அதன் வரையறைகளையும் கணக்கில் கொண்டு வழங்கப்படும் அறிவுரை.

English

The procedure used by social workers, personnel, and guidance advisers, educational specialists, and other professionals to provide information, advice, support, and linkage of resources to people who are deciding about future vocations or to workers who seek to maximize their vocational potential. Career counseling is most commonly offered to students in high schools or colleges to help them learn about existing opportunities and to help them recognize their assets and limitations.