caregiver support group

பராமரிப்பாளர் ஆதரவு குழு

தமிழ் விளக்கம்

இயல்பான அன்றாட வாழ்க்கை வாழ இயலாத மூப்படைந்த பெற்றோர்கள், நோயினாலோ, ஊனத்தினாலோ கவனிப்பு தேவைப்படும் குழந்தைகள், தனிக்கவனம் தேவைப்படுபவர்கள், மற்றும் மனநோயால் பாதிக்கப்பட்ட குடும்ப உறுப்பினர்களைப் பராமரிப்பவர்களின் மன அழுத்தங்களையும், துயரங்களையும் பகிர்ந்துகொண்டு ஒருவருக்கொருவர் பரஸ்பர ஆறுதலாயிருக்க உதவுவதுதான் பராமரிப்பாளர்களுக்கான ஆதரவுக்குழுக்கள். இந்தக் குழுக்கள் சமூகப்பணியாளர்களாலோ, பிற சிறப்புத் தொழிலினராலோ, அல்லது உறுப்பினர்களாலோ அமைக்கப்படலாம்.

English

A support group comprising individuals who have in common the responsibility of managing the lives and providing for the needs of those unable to do so independently. Typically, such groups are made up of people who care for frail elderly parents, children with a disease or disability, special-needs clients, or family members with a mental disorder. The stress of caring for these people is often relieved through the mutual support the members provide one another. The groups may be led by social workers, other professionals, or the members themselves; the degree of structure varies widely.