caries

பற்கள் எலும்புகள் சிதைவடைதல்

தமிழ் விளக்கம்

பல்லின் மீது பாதுகாப்பிற்கென உள்ள எனாமல், டென்டைன் எனும் பல்லெலும்பு (பற்தந்தம்) சிறிது சிறிதாகத் தேய்மானம் அடைவதால் பற்சொத்தை ஏற்படும். பற்களில் காரை படிந்துள்ள இடங்களில் எளிதில் தேய்மானம் நிகழும். ஈறுகளில் எஞ்சிய உணவுகள், ஈறுகளுக்கு இடையே தங்கும் உணவுப்பொருள் துகள்களில் உள்ள கார்போஹைடிரேட்டுகளில் கிரியை செய்யும் பாக்டீரியாக்களும், உமிழ்நீரின் கோழைப் பொருள்களும் அமிலத் தன்மையை ஏற்படுத்தி, பல்லின் மேற்பகுதியில் (அரைத்தல் இடம்), பக்கங்களில், பற்களுக்கு இடையில் எனாமலைப் பாதிப்படையச் செய்கின்றன. இதனைத் தடுக்காவிடின் டென்டைன் எனும் பல்லெலும்பு பாதிப்படையும். இதனால் தோன்றும் பற்குழி பெரிதாகி பாக்டீரியங்கள் தங்கும். பின் பல்லினுள் உள்ள பற்கூழ் குழி பாதிப்படைந்து நோய்த் தொற்று தோன்றும். பற்சொத்தையின் துவக்கத்தில் அறிகுறிகள் தென்படுவதில்லை. பற்சொத்தை நன்கு ஏற்பட்டுள்ளதற்கு முதல் அறிகுறி பல்வலியாகும். இனிப்பு மற்றும் சூடு அல்லது குளிர்ச்சி மிகுந்த உணவால் வலி அதிகமாகும். வாய் துர்நாற்றமும் ஏற்படலாம். பல் மருத்துவர்கள் பற்சொத்தை உள்ள இடத்தைச் சிறிய துளைப் பொறியால் சற்று பெரிதாக்குவர். பின் சுத்தம் செய்து, தந்த ரசக்கலவை (டென்டல் அமால்கம் - மெர்குரி உலோகக் கலப்பு) அல்லது சிமெண்ட் பொருளால் நிரப்பி விடுவர். பற்கூழ் குழியில் நோய்த் தொற்று அதிகமிருப்பின், அப்பகுதியினை அப்புறப்படுத்திச் சுத்தம் செய்து நிரப்பலாம் அல்லது பல்லைப் பிடுங்கி எடுத்துவிடலாம்.

English

Decay of the bones or teeth.