case conference
உதவிக்கான விவாதக் கருத்தரங்கு
தமிழ் விளக்கம்
சமூக சேவை நிறுவனங்கள் உதவி தரத் தீர்மானித்த வாடிக்கையாளர்களின் பிரச்சனைகள், பிரச்சனையின் தன்மை, பிரச்சனை தீர எடுக்கப்படவிருக்கும் தலையீடு, விளைவுகளைப் பற்றிய முன்கணிப்பு இவைகளைப் பற்றி சமூகப் பணியாளர் விவாதிக்க நடத்தப்படும் கூட்டம்.
பிரச்சனை அல்லது செய்யப்படவேண்டிய உதவியின் தன்மை பொருத்து, அப்பிரச்சனையை அதற்கு முன் கையாண்ட அனுபவமிக்க பிற சிறப்புத் தொழிலினர் (professional), உதவி தேவைப்படுவோரின் உறவினர்கள், அந்த உதவியைச் செய்யச் சாத்தியமுள்ள பிற சேவை நிறுவனப் பணியாளர்கள் என்று பலரும் கலந்துகொள்ளும் போது பிரச்சனையைப் பற்றிய மேலதிக தகவல்களும், நடைமுறை சாத்தியமான தீர்வு முறைகளும் கிடைக்க வாய்ப்பேற்படும். சில சமூகப்பணி நிறுவனங்களில் எல்லா நேர்வுகளும் (case) கருத்தரங்குகளில் கலந்துரையாடப்பட்டும், சில சமூகப்பணி நிறுவனங்களில் முக்கியமான நேர்வுகள் (case) மட்டும் கருத்தரங்குகளில் கலந்துரையாடப்படும் வழக்கம் பின்பற்றப்படுகின்றது. இந்த மாதிரியான கலந்துரையாடல்கள் புதுக்கருத்துக்கள் உருவாக உதவி, சேவையின் தரத்தை மேம்படுத்த உதவுகின்றது.

English
A procedure often used in social agencies and other organizations to bring together members of a professional staff and others to discuss a client's problem, objectives, intervention plans, and prognoses. The participants in the conference may include the social workers who are providing the direct service to the client or client system and the professional supervisor of these social workers. Additional participants might include other agency workers who have special expertise or experience with similar problems or populations, members of other professional groups or disciplines who can provide more information and recommendations, and sometimes personal associates or relatives of the client who may be asked to provide information or helping resources. Some agencies schedule conferences on all ongoing cases; others review cases of special interest or concern. Case conferences are intended to improve communication, generate new ideas, and improve services.