case management

(வாடிக்கையாளருக்கான உதவிகளை (நிகழ்வுக்கூறு / நேர்வு) மேலாண்மை செய்தல்.

தமிழ் விளக்கம்

வாடிக்கையாளருக்குத் தன்னாலும் (சமூகப்பணியாளர்) தன்னையொத்த பிறராலும், பிற நிறுவனங்களாலும் செய்யப்படவேண்டிய உதவிகள் பற்றித் திட்டமிடல், அந்த உதவிகள் கிடைக்குமிடத்தை நாடுதல், அந்த உதவிகளின் தன்மை மற்றும் பயன்கள் பற்றி கண்காணித்தல் போன்ற பல செயல்பாடுகளைக் குறிக்கும் மேலாண்மைப் பணி. வாடிக்கையாளருக்கு உதவ ஒப்புக்கொண்ட நிறுவனம், அந்தக் கடைமையைச் செய்ய ஒரு சமூகப்பணியாளரை பொறுப்பாக்குவதிலிருந்து இந்த மேலாண்மைப் பணி தொடங்கும். இவ்வாறு பொறுப்பாக்கப்பட்ட சமூகப்பணியாளர் வாடிக்கையாளருக்காகப் பரிந்து பேசி, அவருக்கான உதவிகளை ஒருங்கிணைத்து, அவருக்கு எதைச் செய்யலாம், செய்யலாகாது என்பதைத் தன் முக்கிய பொறுப்பாக்கிக் கொள்வார். வாடிக்கையாளருக்கு உதவும் இந்த நிகழ்முறையானது, வாடிக்கையாளரின் பிரச்சனைகளைப் பன்முகக் கோணத்தில் பரிசீலிக்கவும், மறுபரிசீலனை செய்யவுமான அறிவார்ந்த பகுப்பாய்வு தேவைப்படுவதாயும், பல சேவை நிறுவனங்களின், நிபுணர்களின் ஒருங்கிணைப்பு தேவைப்படுவதாயும் அமைந்துவிடும். பெரும்பாலான வாடிக்கையாளர்கள் காப்பீட்டுத் திட்ட பயனாளிகளாக இருக்கும் பட்சம், வாடிக்கையாளர் பற்றிய கணிப்புகளும், ஒருங்கிணைப்பும், அதன் தேவையும் முறையாகத் தொகுக்கப்பட்டு, ஆவணப்படுத்தப்படுத்தப் பட்டால்தான் வாடிக்கையாளர் காப்பீட்டு நன்மைகளைப் பெறமுடியும். அமெரிக்க அரசின் காப்பீட்டு விதிமுறைகளின்படி இம்மாதிரியான ஒருங்கிணைப்பு செய்யும் சமூகப்பணியாளர்களுக்கு சேவைக்கட்டணத்தைப் பெறத் தகுதி உண்டு. பல சேவைகளை ஒருங்கிணைத்தல், சமூகப்பணியாளர் பணி மாற்றம் கொள்ளுதல் போன்ற நிச்சயமற்ற சூழலின் பின்னணியில் சமூகப்பணியாளரின் பொறுப்பும் ஆவணங்களும் தான் உதவியின் தன்மை பற்றிய விளக்கத்தை அளிக்க முடியும். சமூகப்பணியாளர்களும், செவிலியர்களும் இது மாதிரியான மேலாண்மைப் பணியில் ஈடுபட அமெரிக்கக் காப்பீடு நிறுவன விதிமுறைகள் இடமளிக்கின்றன.

English

A procedure to plan, seek, and monitor services from different social agencies and staff on behalf of a client. Usually one agency takes primary responsibility for the client and assigns a case manager, who coordinates services, advocates for the client, and sometimes controls resources and purchases services for the client. The procedure makes it possible for many social workers in the agency, or different agencies, to coordinate their efforts to serve a given client through professional teamwork, thus expanding the range of needed services offered. Case management may involve monitoring the progress of a client whose needs require the services of several professionals, agencies, health care facilities, and human services programs. It typically involves case finding, comprehensive multidimensional assessment, and frequent reassessment. Case management can occur within a single, large organization or within a community program that coordinates services among agencies. Federal legislation enacted in 1981 allows states to pay for case management for Medicaid recipients under waiver of the usual rules. Social workers and nurses are the professional groups most often called on to fulfill this function. Case management is seen as an increasingly important way of limiting problems arising from fragmentation of services, staff turnover, and inadequate coordination among providers. See also case integration.