case method system

நேர்வுகளை மையப்படுத்திய உதாரணக் கல்வி முறை

தமிழ் விளக்கம்

உண்மையான அல்லது புனையப்பட்ட பிரச்சனை அல்லது சம்பவத்தை மையப்படுத்தி, அதைப் பல்வேறு கோணங்களில் மாணவர்களை விவாதிக்க வைத்து, அதைப் பற்றிய கருத்துக்களையோ தீர்வுகளையோ தொகுக்கும் போது ஏற்படும் கற்றல். இந்த மாதிரியான கற்றல் முறை தொழில் சார்ந்த கல்வி முறைகளில் பின்பற்றப்படுகிறது. சோபன்சிபா பிரேகன்ரீஜ் என்ற சமூகச் செயல்பாட்டாளர் முன்மொழிந்த இந்த மாதிரியான உதாரணக் கல்வி முறை சமூகப் பணிக் கல்வியில் பெருமளவு இடம் பெற்றிருக்கின்றது.

English

In professional education, the procedure in which students review, discuss, and propose solutions to detailed descriptions of a representative hypothetical or actual problem. Social work education has made extensive use of this procedure since it was first advocated by Sophonisba Breckenridge.