case record

(வாடிக்கையாளருடனான) நிகழ்வுக்கூறை / நேர்வைப் பற்றிய ஆவணம்

தமிழ் விளக்கம்

தன் சேவையைப் பெற வந்த அல்லது நிறுவனத்தின் சார்பில் தனக்கு பொறுப்பாக்கப்பட்ட வாடிக்கையாளர் பற்றிய அடிப்படைத் தகவல்கள், தன் தலையீட்டினால் வாடிக்கையாளர் பெற்ற உதவிகள், அதன் தன்மை மற்றும் பயன்கள் போன்றவற்றை முறைப்படி பதிவு செய்து தன்னிடமோ, நிறுவனத்திலோ வைத்திருத்தல். ஜில் டோனர் என்ற சமூகப்பணிக் கல்வியாளர் கூற்றுப்படி வாடிக்கையாளர் பற்றிய ஆவணங்கள் சமூகப்பணியாளரின் கடமை உணர்ச்சியைப் புரிந்துகொள்ளவும், தன் செயல்பாடுகளை அறிவார்ந்த முறையில் நியாயப்படுத்துவதற்கும், நிறுவனத்திற்கோ, தனக்கோ கிடைக்கும் நிதி உதவியை நியாயப்படுத்துவதற்கும், பல்துறையினருடன் தொடர்பாடவும், சேவையின் தரத்தை உறுதிப்படுத்துவதற்கும், கண்காணிக்க மற்றும் ஆய்வுப் பணிகளுக்கு உதவவும் இந்த ஆவணங்கள் பயன்படும் என்கிறார்.
பார்க்க: problem-oriented record (POR) - பிரச்னை குறித்த பதிவுக்குறிப்பு - தங்களிடம் வரும் நபர்களின் பிரச்னைகளைப் பதிவிட்டு, அதைத் திறனுடன் தொடர்ந்து பராமரிக்க மருத்துவர்கள், சமூகப்பணியாளர்கள், செவிலியர்கள் மற்றும் பிற மனித சேவையில் ஈடுபடுபவார்கள் உபயோகிக்கும் பதிவு முறை. இது லாரன்ஸ் வீட் (Lawrence Weed) என்ற மருத்துவரால், மருத்துவர்களுக்காக, பிரச்சனைகள் குறித்த மருத்துவக் பதிவுக் குறிப்பு முறையாக உருவாக்கப்பட்டாலும், இதனுடைய பயன்பாட்டுத் தன்மையால், பல துறையில் பணியாற்றுபவர்கள் தங்கள் தேவைக்கேற்ப இதை மறுவடிவமைத்துக் கொண்டு பயன்படுத்துகின்றனர்.
இந்தப் பதிவு முறை நான்கு பாகங்களைக் கொண்டது 1. தகவல் தொகுப்பு, தரவு தளம் - (இதில் பிரச்சனையுள்ள நபர் பற்றிய முகப்புத் தகவல்கள், பிரச்சனை பற்றிய குறிப்பு, அப்பிரச்சனை தொடர்புடைய அந்நபரின் குடும்ப, கலாச்சார, மருத்துவ விவரங்கள், முகவரி, தொடர்பு கொள்ள வேண்டியவர்கள் முதலிய) 2. பிரச்சனைப் பட்டியல் (நபர் முன்னுரிமைப்படுத்திய அளவில் எண்களைக் குறிப்பிட்டு குறிக்கப்பட்ட பிரச்சனைப் பட்டியல். இது பிரச்சனைகள் எந்த அளவுக் குறைந்துள்ளது என்பதைப் பின்னர் அறிய உதவும்) 3. பிரச்சனைகளைக் கையாளப் போடப்பட்ட திட்டம் (பிரச்சனைப் பட்டியலில் குறித்த ஒவ்வொரு பிரச்சனையையும் கையாள என்ன நடவடிக்கை எடுக்கப்படவிருக்கின்றது என்ற விளக்கம்) 4. தொடர் கண்காணிப்பு (திட்டமிட்ட நடவடிக்கைகளைச் செயல்படுத்திய விவரம்). பிரச்சனைகள் குறித்த இந்தப் பதிவுமுறை குறிப்பிட்ட பிரச்சனைகள் மீது கவனம் செலுத்த உதவி, அந்தப் பிரச்சனைகள் எப்படித் தீர்க்கப்பட்டன என்பதைக் காலவரிசைக்கிரமமாக அறிய உதவுவதால், இந்தப் பதிவுமுறை மருத்துவர்கள் (பிற சேவைப்பணியாளர்களுக்கும்) தங்களுடைய பொறுப்புகளை மிக எளிதாகப் பின்பற்ற உதவுகிறது
பார்க்க:- person oriented recording - நபர் சார்ந்த பதிவுக்குறிப்பு / நபர் சார்ந்த பதிவேடு - தங்களிடம் வரும் வாடிக்கையாளர்களைப் பற்றிய பிரத்யேக விவரங்கள், அவருடைய பிரச்சனைகள், அதற்கு வழங்கப்பட்ட சிகிச்சை முறைகளைப் பதிந்து வைக்க சமூகப்பணியாளர்களும், சேவை நிறுவனங்களும் ஒரு குறிப்பிட்ட வடிவில் பின்பற்றும் பதிவு நடைமுறை. இது மருத்துவர்கள் பின்பற்றும் நோயாளிகளின் பதிவேடுகளைப் போன்றதாகும். இதில் நோயின் தன்மை, நோயறிதல், வழங்கப்பட்ட சிகிச்சை, சிகிச்சையில் கண்டறிந்த ஆறு வாரத்திற்கு ஒருமுறையோ, 12 வாரத்திற்கு ஒருமுறையோ ஏற்பட்ட முன்னேற்றம் போன்ற தகவல்கள் பதியப்படும்.

English

Information about the client situation and the service transaction that is documented by the social worker during the intervention process and retained in the files of the social agency or social worker. Case records are an important source of information about clients, services, goals, intervention strategies, and outcomes. They are used in case management and interprofessional communication on quality assurance. According to Jill Doner Kagle (Social Work Records, 2nd ed., Belmont, CA: Wadsworth, 1991), case records also exist to demonstrate accountability, justify funding, and support supervision and research. See also problem-oriented record (POR) and SOAP charting method.