casework
சமூகத் தனியாளர் பணி
தமிழ் விளக்கம்
தனி நபர்களும் சமூகமும் ஒன்றையொன்று சார்ந்திருப்பதாலும், சமூக நிலைமைகள் தனிமனிதரின் மனப்பாங்கையும், நடத்தையையும் பாதிப்பதாலும், அந்தப் பாதிப்பினால் தனது அன்றாடப் பிரச்சனைகளை எதிர்கொள்ளச் சிரமப்படும் தனிமனிதர்களுக்கு, அவர்களின் பிரச்சனை மற்றும் இயல்புக்கு ஏற்றவாறு உதவி செய்யும் தொழில் முறையிலான வழிமுறையை சமூகத் தணியாளர் பணி எனலாம். தனிநபருக்கான சமூகப்பணி என்பது வாடிக்கையாளருக்கும் அவரது சூழல் அனைத்துக்குமோ (குடும்பம், பள்ளி அல்ல்து பணிபுரியுமிடம்) அல்லது சூழலின் ஒரு பகுதிக்குமோ (குடும்ப உறுப்பினர்கள் அல்லது பணிபுரியும் இடத்திலுள்ள மேலதிகாரி) இடையில், ஆரோக்கியமான சீரமைவை ஏற்படுத்துவதற்குத் தேவையான ஆளுமையை வளர்த்தெடுக்க உதவுகிறது.
English
See social casework.