cash out
(சமூகநல உதவிக்கானத் தகுதியை) பணமாக மாற்றிக்கொள்ளுதல்
தமிழ் விளக்கம்
நிதி நிர்வாகத்தில் உபயோகப்படுத்தப்படும் சொல். அதாவது ஒரு சொத்தைப் பணமாக மாற்றிக்கொள்ளும் முறை. சில நல உதவிகளைப் பெறுவதற்குத் தகுதியானவர் என்று தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவருக்கு, அந்த உதவியை அவர் விரும்பும் வண்ணம் (வரையறைகளுக்கு உட்பட்டு) பெற்றுக்கொள்ளும் அடையாளச் சீட்டாகவோ, அல்லது மாற்றிக் கொள்ளத்தக்க பணப் பாத்திரமாகவோ, பொருளாகவோ கொடுக்காமல் நேரடியாகப் பணமாகக் கொடுக்கும் முறை. ஏழைகளுக்கு வழங்கப்படும் உணவுக் கூப்பன்களுக்குப் பதிலாக, தங்கள் அடையாள அட்டையைக் காண்பித்து அங்கீகரிக்கப்பட்ட கடைகளில் உணவுப் பொருட்களை வாங்கிக் கொள்ளும் முறை. இதனால் பெருமளவு நலத்திட்ட விநியோகச் செலவுகள் குறைகிறது.
English
Providing a welfare benefit in money rather than coupons, vouchers, or in-kind service. For example, some states provide food stamp benefits in cash rather than coupons with cost reductions and greater convenience to clients, social workers, and storekeepers.