caste
ஜாதி, சாதி, பிறப்படிப்படையான செயற்கைச் சமுதாயப் பிரிவு, ஒட்டறுத்து வாழவிரும்பும் சமுதாய வகுப்பு, தனிவாழ்வுடைய வகுப்பு, சாதி முறை
தமிழ் விளக்கம்
.சாதி என்பது இந்தியப் பாணியிலான சமூகத்தின் அடிப்படைச் சமூக அலகாகவும் (Social Unit), சமூக அடுக்கமைவும் (social stratification) ஆகும். இதன் தனித்தன்மை புறமணத் தடை (அகமணம்), பிறப்பின் அடிப்படையிலான வாழ்க்கை முறையை உள்ளடக்கிய வேலைப்பிரிவினையும், மரபு வழக்கமான சடங்காச்சார அந்தஸ்து தீர்மானிக்கும் சமூகத் தொடர்பு முறைகளும், பிறரிடமிருந்து விலகியிருக்கவும், விலக்கிவைக்கவும் காரணமான தீட்டு என்ற கலாச்சார கண்ணோட்டமும் சாதி அமைப்பின் அடிப்படைக்கூறுகளாகும். இது இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், இலங்கை உள்ளிட்ட நாடுகளில் நிலவுகிறது. ஒருவரின் சாதி அவரின் பிறப்பைக் கொண்டு தீர்மானிக்கப்படுகிறது. ஆகவே இதனை வெளியேற வழியற்று அடைபட்ட வகுப்பு என்று கூறலாம். இது சமூக வழக்கு மற்றும் அதிலிருந்து தோன்றிய அரசுகள் போன்றவற்றால் பாதுகாக்கப்டுகிறது. ஒரே சாதிக்குள் நடைபெறும் அகமண முறையே சாதியின் தோற்றத்துக்குக் காரணமென்றும் (அம்பேத்கார்), சாதி இறைவனால் ஏற்படுத்தப்பட்ட அமைப்பு என்றும் (மரபுக் கோட்பாடு), சாதி மக்கள் குழுக்கள் செய்யும் தொழில் அடிப்படையில் அமைந்தன (தொழிற் கோட்பாடு) என்றும், சாதி முறைக்கு அடிப்படை சமயமே என்றும் (சமயக் கோட்பாடு), உயர் சாதியினர் தமது சலுகைகளைத் தக்கவைக்க ஏற்றவாறு அமைத்துகொண்ட அமைப்பே சாதியென்றும் (அரசியற் கோட்பாடு), ஆரியர்கள் இந்தியாவுக்கு புலம்பெயர்ந்த போது தொல் திராவிடர்களை அடிமைப்படுத்த நிறுவிய அமைப்பே சாதியென்றும் (இனக் கோட்பாடு) சாதியின் தோற்றம் பல்வேறு வகையாக விளக்கப்படுகின்றது.
English
A highly restrictive social class. In some societies people are born into their castes, which thereafter limits their choices of level and type of education, occupations, associations, and marital partners.