cataract
கண்புரை நோய்
தமிழ் விளக்கம்
சாதாரணமாகக் கண்ணில் உள்ள விழிக் குவியாடி (lens) ஒளி ஊடுருவும் தன்மையுடையது. கண்புரை (cataract) என்பது கண் வில்லையில் (lens) ஒளி ஊடுறுவுத் தன்மையைக் குறைக்கும் ஒரு நிலை ஆகும். இதை கண்ணில் திரை விழுந்துள்ளது என்றும் சொல்வதுண்டு. திரை என்றால், தோல் சுருக்கம் / கண்புரை என்று இரு பொருள் கொள்ளலாம். கண்புரைகள் தன் இயல்பு நிலையிலிருந்து மாற்றமடைந்த ஒருவித புரதத்தால் ஆனவை; இவை விழித்திரையில் (retina) வீழும் ஒளியின் அளவை குறைக்கவோ அல்லது முழுமையாகத் தடுக்கவோ செய்கின்றன. கண்புரை ஒரு கட்டியோ, சதை வளர்ச்சியோ அல்ல. புரை ஒரு தொற்று நோயும் அல்ல. வயதாவதால் லென்ஸில் ஏற்படும் மாற்றமே. இது பெரும்பாலும் முதிர்ந்த வயதில் ஏற்படக்கூடிய ஓர் நிலமை. கண்புரையால் கிட்டப்பார்வை கூடுதலாகி கண் வில்லை சற்றே மஞ்சளாக மாறி ஒளிபுகா வண்ணம் இருப்பதைக் காணவியலும். கண்புரை நீல நிறத்தை காண்கின்ற திறனைக் குறைக்கும். பல ஆண்டுகள் ஆன பின்பும் கண்புரை (பெரும்பாலும்) பெரியளவு தீங்கு விளைவிப்பதில்லை என்றாலும், புரை முற்றிய பின்பு விழித்திரையை அடையும் ஒளியின் அளவு வெகுவாகக் குறைந்து பார்வையில் குறைவோ பார்வை பறிபோகக்கூடிய நிலையோ ஏற்படலாம். இதை அறுவை சிகிச்சை மூலம் சரி செய்யலாம். பொதுவாக இது இரு கண்களிலும் ஏற்படுமாயினும் ஒரு கண்ணிற்கும் மற்றொன்றிற்கும் இடையே கால இடைவெளி இருக்கும். இந்தியாவில் பார்வைக் குறைபாடுடன் இருப்பவர்களின் எண்ணிக்கை 68 லட்சம். இதில் 63 விழுக்காடு பேர் கண்புரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
English
Cloudiness in the lens of an eye resulting in impaired vision. Surgical treatment for cataracts has become relatively convenient and inexpensive.