catastrophic illness

பெருங்கேடு விளைவிக்கின்ற நோய்கள்

தமிழ் விளக்கம்

பெருங்கேடு விளைவிக்கின்ற நோய்கள் என்பது நீண்ட நாள் மருத்துவக் கவனிப்பு தேவைப்படுகின்ற, அதிகச் செலவாகும் சிகிச்சை முறைகள் தேவைப்படுகின்ற பக்கவாதம், புற்று நோய், இரத்தப் புற்றுநோய் (leukemia), எல்லா உணர்ச்சியும் இழந்த முழு மயக்கச் செயலின்மை நிலை (coma), மாரடைப்பு போன்ற நோய்களை உள்ளடக்கியது. நோயாளிகளின் செயலற்ற தன்மையும், சிகிச்சைச் செலவினங்களும் அதிகமான பொருளாதார நெருக்கடிகள் தரக்கூடியதால், இவர்களுக்கான மருத்துவக் காப்பீடுகள் மறுக்கப்படுகின்றன அல்லது அதிக விலையுள்ள காப்பீடுகளை எடுக்கவேண்டியுள்ளது.

English

A physical or mental disorder that represents a sudden and very serious change in the victim's lifestyle. The term is defined more narrowly by the Social Security Administration (SSA) and Medicare as prolonged and disruptive illness requiring long hospital stays and expensive treatment.