catatonic schizophrenia
உணர்விழப்புடன் கூடிய மனச்சிதைவு
தமிழ் விளக்கம்
ஐந்து வகையான மனச் சிதைவு (schizophrenia) நோய்களில், உணர்விழப்புடன் கூடிய மனச்சிதைவு (catatonic schizophrenia) என்பது ஒரு வகை (மற்ற நான்கு வகைகள் - 1.Paranoid schizophrenia: கருத்துத் திரிபு மனச்சிதைவு, பிறர் மீது நம்பிக்கையில்லாததோடு அவரைக்கண்டு அஞ்சுகின்ற மனச்சிதைவு, வளரும் உளச்சிதைவு 2. Disorganized schizophrenia: ஒழுங்குமுறையற்ற மனச்சிதைவு 3.Undifferentiated schizophrenia: வகைபடுத்தமுடியாத மனச்சிதைவு 4. Residual schizophrenia: தேங்கி விட்ட மனச்சிதைவு) இதன் முக்கிய அறிகுறியான உள ஆற்றற் செயல்பாடும், உள ஆற்றலால் தசைப்பகுதி இயங்குவித்தலில் குறைபாடும் ஏற்படுவதால் உடலை இயக்கமுடியாமை அல்லது விரைவான இயக்கம், பிறர் சொன்ன சொற்களை அப்படியேப் பின் பற்றி சொல்லுதல், பிறர் செய்வதை அப்படியே செய்துகாட்டுதல், பொருத்தமற்ற உடலிருக்கை நிலை (அங்கஸ்திதி), தீவிர எதிர்மறைத்தன்மை மற்றும் ஊமைத்தன்மை போன்ற அறிகுறிகள் தென்படும்.
English
Technically known as “schizophrenia, catatonic type,” one of the five major subtypes (also including paranoid, disorganized, undifferentiated, and residual) of schizophrenia, characterized by marked psychomotor disturbance that may involve immovability or excessive movement, echolalia, echopraxia, inappropriate postures, extreme negativism, and mutism.