categorical assistance
திட்டவட்டமான / மறுப்புக்கிடமற்ற / ஐயத்திற்கிடமற்ற உதவி
தமிழ் விளக்கம்
சமூகப் பாதுகாப்புச் சட்டத்தின்படி, குறிப்பிட்ட குறியிலக்கு மக்களுக்காக வழங்கப்படும் திட்டவட்டமான உதவி. முதியோருக்கான நல உதவி, பார்வையற்றவருக்கான நல உதவி, ஆசிரதக் குழந்தைகளுக்கான (dependent children) நல உதவி, நிரந்தர ஊனமுற்றோருக்கான நல உதவி போன்றவை இந்த திட்டவட்டமான உதவிகளைக் குறிக்கும். முதலில் மத்திய அரசின் (அமெரிக்க) நிதிப் பங்களிப்போடு செயல்படுத்தப்பட்ட இத்திட்டங்கள், 1974 ஆம் ஆண்டிலிருந்து மத்திய அரசின் வருமானப் (குறைவான வருமானத்தை ஈடுக்கட்டும்) பாதுகாப்புத் திட்டமாக மாறியது.
English
Welfare programs for specific groups of people identified in the Social Security Act. Originally, the programs were Old Age Assistance (OAA), Aid to the Blind (AB), Aid to Dependent Children, and Aid to the Totally and Permanently Disabled (ATPD). Needy people in these categories could receive financial assistance from their respective states, supplemented by federal grants. In 1974 responsibility for the three adult categories was assumed by the federal Supplemental Security Income (SSI) program.