cathexis
ஒருபொருள் அல்லது கருத்துச் சார்ந்த மன அவா ஆற்றலின் அளவு
தமிழ் விளக்கம்
ஒரு நபரின்மீதோ, கருத்தின்மீதோ, பொருளின்மீதோ அல்லது தன்மீதோ ஒருவர் கொள்ளும் உணர்வு ரீதியான ஒருமுகச் சிந்தனை.
பார்க்க: decathexis - உணர்வு விலக்கம், நபர்கள், பொருட்கள் மற்றும் கருத்துச் சார்ந்த இச்சைகளை / ஆசைகளைக் குறைத்துக்கொள்ளுதல் - இது உள பகுப்பாய்வு முறையில் கையாளப்படும் சொல்லாட்சி. உள மருத்துவரான பிராய்ட் உணர்வு ஒன்றிப்பை / இச்சைகளை (Cathexis), மனிதர்களில் உந்து சக்தியாக (libido) மின்னேற்றம் செய்வதுடன் ஒப்பிட்டார். உணர்வு ஒன்றிப்பு ஆரோக்கியமான மனநிலை என்றாலும், சில நேரங்களில், குறிப்பாக நெருங்கியவர்களின் மரணத்திற்கு பிறகோ, விரும்பிய ஒன்று கிடைக்காத போதோ அதிலிருந்து உணர்வு விலக்கம் பெறுவது மன அழுத்தத்தைக் குறைக்க உதவும்.
anticathexis - உணர்வுகளை அடக்கப் பயன்படும் உளச்சக்தி - Cathexy என்றால் ஒருபொருள் அல்லது கருத்தின் மீது மன விருப்ப ஆற்றலின் அளவு - Anticathexy என்றால் அந்த விருப்பத்தைக் கட்டுப்படுத்தும் / அடக்கி வைக்கும் ஆற்றல். பிராய்டின் உளபகுப்புக் கோட்பாட்டின்படி, ஆழ்மன இச்சைகளை அடக்கி வைக்கும் ஆற்றல்.

English
The concentration of emotional energy and feelings onto a person, idea, object, or oneself. See also decathexis.