Catholic Relief Services (CRS)
கத்தோலிக்க நிவாரண சேவைகள்
தமிழ் விளக்கம்
பஞ்சம், தொற்று நோய்கள், வெள்ளம், சூறாவளி, வறட்சி, பூகம்பம், போர், மற்றும் உள்நாட்டுக் கலவரம் போன்றவற்றால் பாதிக்கப்பட்டு நிலைகுலைந்த மக்களுக்கு உதவும் பொருட்டு நிதி திரட்டவும், நிவாரணச் சேவைகள் அளிக்கவும் கத்தோலிக்க திருச்சபையால் உருவாக்கப்பட்ட சர்வதேச நிறுவனம். இது ஐக்கிய நாடுகளின் பேரிடர் நிவாரண அமைப்புடனும் (United Nations Disaster Relief Organization (UNDRO), சர்வதேச நிவாரண ஒருங்கிணைப்புக் குழுவுடனும், பிற திருச்சபை மற்றும் தனியார் நிவாரண அமைப்புகளுடனும் இணைந்து பணியாற்றுகின்றது.
English
The international organization founded and sponsored by the Roman Catholic Church to raise funds and distribute needed resources and provisions to those populations victimized by poverty and disasters, including famine, epidemics, floods, hurricanes, droughts, earthquakes, war, and civil disorder. CRS coordinates many of its activities with the United Nations Disaster Relief Organization (UNDRO) and, through the Steering Committee for International Relief, other church organizations and private relief groups.