CCETSW

சமூகப் பணிக் கல்வி மற்றும் பயிற்சிக்கான மத்திய சபை

தமிழ் விளக்கம்

இந்த அமைப்பு சுகாதாரப் பணியாளர் விஜயம் மற்றும் சமூகப்பணி பயிற்சி என்ற இங்கிலாந்து நாட்டின் சட்டத்தின்படி ஏற்படுத்தப்பட்ட அமைப்பாகும். இது இதற்குமுன் செயல்பட்ட குழந்தைகள் பாராமரிப்பிற்கான பயிற்சிக் குழு, சமூகப்பணிப் பயிற்சிக்கான குழு, நன்னடத்தை மற்றும் விடுதலைக் கைதிகளின் நலன் பேணும் அதிகாரிகளுக்கான பயிற்சிக்குழு, மருத்துவ சமூகப்பணியாளர் அமைப்பு மற்றும் உளப்பிணி சமூகப்பணியாளர் அமைப்பு போன்றவையெல்லாம் ஒருங்கிணைக்கப்பட்டு சமூகப்பணிக் கல்வி மற்றும் பயிற்சிக்கான மத்திய சபையாக மாற்றம் பெற்று, 1970 முதல் 2001 ஆம் ஆண்டு வரை செயல்பட்டது. 2001 ஆம் ஆண்டில் இந்த அமைப்பு கலைக்கப்பட்டு அதன் பணிகள் சமூகக் கவனிப்பு மன்றத்திடம் (General Social Care Council (GSCC)) ஒப்படைக்கப்பட்டன.

English

See Central Council for Education and Training in Social Work (CCETSW).