centers for independent living
பிறர் ஆதரவின்றி / சுயாதீனமாக வாழ்வோர்க்கான மையங்கள், சுதந்திர வாழ்க்கை மையங்கள் (ILC or CIL)
தமிழ் விளக்கம்
சுதந்திர வாழ்க்கை மையங்கள் அல்லது சுயாதீன வாழ்வு மையங்கள் என்ற கருத்தாக்கம் ஊனமுற்றோர் உரிமைகளை முன்னெடுத்துப் பணியாற்றிய எட் ராபர்ட்ஸ் (இவரும் ஊனமுற்றவர்தாம்) என்பவரால் 1970 வாக்கில் பிரபலமடைந்தது. இந்த சுதந்திர வாழ்க்கை மையங்கள் ஊனத்தையும், இயலாமையையும் பற்றிய சமூகக் கண்ணோட்டத்தை மாற்றி ஊனமுற்றோரின் சுயநிர்ணய உரிமை, சுயமரியாதை மற்றும் சமவாய்ப்புக்கள் நடைமுறையை எதார்த்தமாக்க முயல்கிறது. ஊனமுற்றவர்கள் மற்றும் மூப்பினால் இயலாதவர்களைப் பற்றிய சமூக, மருத்துவக் கண்ணோட்டம் அவர்களை நோயாளிகளாகவும், குறையுள்ளவர்களாகவும், பயனற்றவர்களாகவும், பிறருக்குப் பாரமாகவும் எதிர்மறைத் தன்மையுடன் சித்தரித்து, அவர்கள் சுதந்திரமான வாழ்க்கை வாழவிடாமல் தடுக்கின்றது. இதை மாற்றி ஊனமுற்றவர்களாலும் பல தளங்களில், கல்வி, வருமானமீட்டல், குடும்ப வாழ்க்கை போன்றவற்றில் சுதந்திரமான வாழ்க்கை வாழமுடியும் என்பதை இந்த மையங்கள் சாத்தியமாக்குகின்றன.
English
See independent living, centers for.