central nervous system (CNS)
மத்திய நரம்பு மண்டலம்
தமிழ் விளக்கம்
மைய நரம்பு மண்டலம் (Central nervous system - CNS) அல்லது மைய நரம்புத் தொகுதி என்பது நரம்பு மண்டலத்தின் இரு பெரும் பிரிவுகளில் ஒன்றாகவும், மிகப் பெரிய பகுதியாகவும் இருப்பதுடன், தான் பெறும் தகவல்களை ஒன்றிணைத்து தொழிற்படும் ஆற்றல் கொண்டதாகவும் இருக்கின்றது. இது மூளை மற்றும் தண்டுவடத்தை (முண்ணாணை) உள்ளடக்கியது. விழித்திரையும் (retina), விழி நரம்பும் (optic nerve), கருவளர்ச்சியின் போது மூளைவிருத்தி நிகழ்கையில், அங்கிருந்து உருவாகும் வெளிவளர்ச்சிகளாக இருப்பதனால், அவையும் மைய நரம்பு மண்டலப் பகுதியாகவே கொள்ளப்படுகின்றது. இவை மட்டுமே நேரடியாப் பார்க்கக்கூடிய அமைப்புக்களாக உள்ளன. மைய நரம்பு மண்டலமானது, புற நரம்பு மண்டலத்தோடு (peripheral nervous system) இணைந்து உயிரினத்தின் நடத்தை, தொழிற்பாடுகளைக் கட்டுப்படுத்துகின்றது. மையநரம்பு மண்டலம் எலும்புகளால் பாதுகாக்கப்படுகிறது. மூளை கபால எலும்புகளாலும், தண்டுவடம் முதுகெலும்புகளாலும் பாதுகாக்கப்பட்டுள்ளன.
நமது உடம்பிலுள்ள கண், காது, மூக்கு, வாய், தோல் போன்ற ஐம்பொறிகளும் வெளி உலகில் நிகழ்வனவற்றை நாம் பார்க்கவும், உணரவும், அதோடு தொடர்புகொள்ளவும் உதவுகின்றன. இதற்கு ஆதாரம் நரம்பு மண்டலம் தான். இந்த நரம்பு மண்டலம் உடலின் ஐம்பொறிகளோடு மட்டுமல்லாமல் அனைத்து உறுப்புகளுடனும் இணைக்கப்பட்டு இருக்கின்றன.
நரம்பு மண்டலம் என்பது மூளை, தண்டுவடம், நரம்புகள் ஆகியவற்றின் தொகுதியாகும். இதை இரண்டு பிரிவாகப் பிரிக்கலாம்.
(1) மத்திய நரம்பு மண்டலம் இதில் மூளையும், தண்டுவடமும் அடங்கும். (2) வெளிப்புற நரம்பு மண்டலம் இதில்மூளையில் இருந்துவெளிவரும் பன்னிரண்டு ஜோடி கபால நரம்புகளும், தண்டுவடத்தில் இருந்து வெளிவரும் முப்பத்தியொன்று ஜோடி தண்டுவட நரம்புகளும் இந்த நரம்புகளில் அடங்கும். நரம்புகள் அவற்றின் செயலுக்கேற்ப உட்செல்லும் நரம்புகள் அல்லது உணர்ச்சி நரம்புகள் என்றும், வெளிச்செல்லும் நரம்புகள் அல்லது செய்கை நரம்புகள் என்றும் இருவகைப்படுகின்றன. அதாவது உடலின் பல பாகங்களிலிருந்து / உறுப்புகளிலிருந்து மூளைக்குச் செய்திகளை எடுத்துச்செல்லும் நரம்புகள் உட்செல்லும் நரம்புகள் அல்லது உணர்ச்சி நரம்புகள் எனப்படுகின்றன. மூளை அனுப்பும் செய்திகளை எடுத்துக்கொண்டு அதற்கேற்ப பணிகளை மேற்கொள்ளும் நரம்புகள் செய்கை நரம்புகள் அல்லது வெளிச்செல்லும் நரம்புகள் எனப்படுகின்றன.
மூளை;- உடலின் முக்கிய உறுப்பாகவும், நரம்பு மண்டலத்தின் மைய உறுப்பாகவும் மூளை திகழ்கிறது. இதுவே நமது சிந்தனைக்கும், பேச்சுக்கும் அடிப்படையாக விளங்குகிறது. மூளையின் பணிகள் (1) செய்திகளை ஏற்றுக்கொள்கிறது. (2) கட்டளைகளை அனுப்புகிறது. (3)செய்திகளைச் சேகரித்து வைத்துக்கொண்டு அறிவுப் பணிகளைச் செய்கிறது. மூளை மூன்று பாகங்களை கொண்டது. அவை பெருமூளை, சிறுமூளை, முகுளம் ஆகியன ஆகும். நாம் நினைவோடு செய்யும் செயல்கள், நாம் விருப்பத்தின் பேரில் செய்யும் செயல்கள் அனைத்தும் பெருமூளையின் கட்டளைப்படி நடக்கின்றன.
நம்முடைய உடல் உறுப்புகளும், தசைகளும் அசைந்து இயங்குகின்ற ஒருங்கிணைப்புத் தன்மைகள் அவற்றின் தெளிவான தனிப்பண்பு, அவற்றின் எளிதான இலகுவான இயக்கம் ஆகியவற்றைக் கட்டுப்படுத்துவது சிறுமூளையாகும். சுவாச வேலைகள், ஜீரணமாகுதல், இதயத்துடிப்பு போன்ற தன்னிச்சையான செயல்களுக்கான அனைத்து தசைகளுக்கும் முகுளத்தின் கட்டளைகளே காரணமாக அமைகின்றன.

English
The brain and spinal cord. The CNS supervises and coordinates the activity of the entire nervous system. See also autonomic nervous system (ANS) and peripheral nervous system.