centralization

நடுவணாக்கம், மையப்படுத்துதல், அதிகாரங்களை ஓரிடத்தில் ஒருமுகப்படுத்துதல், மையம் நோக்கிய ஆட்சியமைத்தல், அதிகாரங்களை மைய ஆட்சிக்குக் கொண்டு சேர்த்தல்

தமிழ் விளக்கம்

ஒருமுகப்படுத்துதல்.ஒற்றை மயமாக்கல் (அல்லது) உலகப் பொதுவாக்கல், ஒருகளப்படத்துதல், இறுக்கமான விதிமுறைகள் உருவாக்கம்.
ஒரு மத்திய குழு அல்லது இடத்தின் கீழ் அனைத்து முடிவுகளையும் எடுத்து அதிகாரத்தைப் பலப்படுத்துதல். பலதுறைகளில் இந்த வார்த்தை பயன்படுத்தப்பட்டாலும், பொதுவாக மையம்நோக்கிய, ஒருமுகப்படுத்தப்பட்ட செயல்பாடு என்ற பொருளைத் தருவது. ஒரு நிறுவனமோ, தொழிற்சாலையோ அல்லது அரசோ பரந்து பல இடங்களில் வியாபித்திருந்தாலும், தன் செயல்பாடுகளைப் பற்றி திட்டமிடலையும் முடிவெடுப்பதையும் ஓரிடத்தில் வைத்தோ அல்லது ஒரு குழுவின் மூலமாகவோ செய்யும் செயல்முறை.

English

The concentration of administrative power within a group, organization, or political entity. For example, public assistance programs that had been managed primarily at the state and local levels became more centralized with the passage of the Social Security Act and later the Supplemental Security Income (SSI) program.