cerebral palsy

மூளையில் ஏற்படும் முடக்கு வாதம், பெருமூளை ஆற்றலிழந்த நிலைமை

தமிழ் விளக்கம்

பெருமூளை வாதம் என்பது மூளையில் ஏற்படும் ஒருவகை கோளாறாகும். இது பிரசவத்திற்கு முன்னோ அல்லது பிரசவத்தின் போதோ மூளையில் ஏற்படும் பாதிப்பால், தசைக் கட்டுப்பாடு மற்றும் ஒருங்கிணைப்பை இழக்கும் நிலையாகும். இது நாட்பட நாட்பட முற்றாதெனினும், பிறப்பதற்கு முன்போ பின்போ, எப்போது வேண்டுமானாலும் இந்நோய் குழந்தைகளை மிதமாகவோ கடுமையாகவோ பாதிக்கலாம். பெருமூளை வாதத்தால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தையால் பருவ வயதிற்கேற்ற வகையில் தவழவோ, நடக்கவோ, ஓடவோ, உட்காரவோ, நிற்கவோ முடியாது. மெல்லுதல், முழுங்குதல், பார்வை, பேச்சு ஆகியவை பாதிக்கப்படுவதுடன் வலிப்பு நோயும் ஏற்படலாம்.

English

A disability of muscle control and coordination caused by brain damage that occurred before or during birth. The degree of severity depends on the extent of the brain damage. Although no cure exists, appliances such as braces and treatment involving physical, occupational, speech, and psychosocial therapy are often effective in minimizing disability.