certification
சான்றளித்தல்
தமிழ் விளக்கம்
சான்றளித்தல் என்பது ஒரு நபரோ அல்லது பொருளோ தனது தகுதி, (பண்பு, திறன்) இன்னதென்று சாற்றுவதை அதிகாரபூர்வமாக ஒப்புக்கொள்ளுதல் ஆகும். ஒரு குறிப்பிட்ட துறையில் பணிபுரிய அதற்கென்று வரையறுக்கப்பட்ட கல்வித் தகுதியை ஒருவர் பெற்றிருக்கின்றார் என்பதற்கான சட்டபூர்வமான சான்றளிப்பை எல்லா அரசுகளும் எதிர்பார்க்கின்றன. ஒரு துறைசார் தகுதிவுடமைக்கான சான்றளிப்பை அத்துறை சார்ந்த சம்மேளனங்கள் செய்கின்றன. சான்றிதழ் பெறாதவர்கள் அப்பணியைச் செய்யத் தடையேதும் இல்லாவிட்டாலும், சான்றிதழ் பெற்றவர்களுக்கு இணையான உரிமையையும், சலுகைகளையும் அவர்கள் பெறமுடியாது. ஒரு துறையில் சான்று பெறுவது எனபது அந்தத் துறையில் பதிவு செய்துகொள்வதைவிட உயர்ந்தநிலை. சமூகப்பணியாளராக பதிவு செய்துகொள்வதை விட சமூகப்பணியாளராக சான்றளிக்கப்படல் அதிகப்படியான சட்ட அங்கீகாரம் உடையது. சான்று பெறுவதைவிட சமூகப்பணியாளராக பணிபுரிய உரிமம் பெறுவது இன்னும் மேலானது.
English
An official assurance that someone or something possesses the attributes he, she, or it claims to have. Legal certification of a profession is the warranting by a state that the people certified have attained a specified level of knowledge and skill. Professional certification is such warranting by a professional association. Certification typically does not prohibit uncertified people from engaging in the specified activity (as does a license), but it prevents their use of the title “certified.” Certification is usually considered to be a stronger form of regulation than registration of social workers but weaker than the license. See also legal regulation, Academy of Certified Social Workers (ACSW), and Licensed Clinical Social Worker (LCSW).