change residue
மாற்றத்தின் விளைவு / பக்க விளைவுகள் / மாற்றத்தின் எச்சம்
தமிழ் விளக்கம்
சமுதாயப் பணியாளர்கள் தாங்கள் திட்டமிட்ட மாற்றத்தை அடையும் போது, அதனுடைய பக்க விளைவுகளாக அவர்கள், எதிர்பார்த்த, எதிர்பார்க்காத, வெளிப்படையாக உணரத்தக்கதாகவோ, பூடகமாகவோ சில விளைவுகள் ஏற்படலாம். எதிர்பார்த்த எதிர்பார்க்காத எந்த விளைவுகளையும் சமூகப்பணியாளர்களுக்குக் கையாளத் தெரிந்திருக்க வேண்டும்.
English
In the planned changes that community organizers help to bring about, the side effects that occur after the newly implemented structures are in place. The residue may be intended or unintended, desired or not, tangible or elusive. Because side effects are inevitable, organizers find it necessary to build ways of dealing with them into the plan.