Charity Organization Societies (COS)

அறக் கட்டளை சங்கங்கள்

தமிழ் விளக்கம்

இவைதான் தற்காலத்திய சேவா நிறுவனங்களின் முன்னோடி. முதல் அறக்கட்டளைச் சங்கம் 1869 ல் லண்டனில் ஆரம்பிக்கப்பட்டது. அமெரிக்காவின் முதல் அறக்கட்டளை 1877 ஆம் ஆண்டு நியூயார்க் நகரில் ஆரம்பிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து பல நகரங்களில் அறக்கட்டளைகள் ஆரம்பிக்கப்பட்டு, தன்னார்வத் தொண்டர்கள் மூலம் நிர்வகிக்கப்பட்டது. ஆரம்பத்தில் இவர்கள் 'நட்பார்ந்த வருகையினர்' என்றழைக்கப்பட்டனர். இந்த நட்பார்ந்த வருகையினர்தாம் பயிற்சிகளின் மூலம் பரிணாமமடைந்து சமூகப் பணியாளர்கள் ஆனார்கள். அரசாங்கம் மக்களின் பொருளாதார சமூகப் பாதுகாப்பில் அக்கறை கொண்டு, அதிக நிதி ஒதுக்கீடு செய்ய ஆரம்பிக்க, அப்பொழுது உருவான குடும்பங்களுக்கான சேவை (Family Service America (FSA) அமைப்புகளுடன் அறக்கட்டளைகள் ஒருங்கிணைக்கப்பட்டன.

English

Privately administered and philanthropically funded organizations that were the essential forerunners of modern social services agencies. The first COS was established in London in 1869. The first American COS was in Buffalo, New York, in 1877 and was duplicated in most larger eastern cities soon thereafter. COSs were staffed by volunteer workers who provided direct services to clients and coordinated community efforts to deal with social problems. As more COS workers, sometimes known as friendly visitors, gradually became professionalized, they were called social workers. By the 1930s, as government assumed more responsibility for people's economic and social security, the original COS goal was reached; thus, most of the organizations became or merged with family agencies united in the Family Service Association of America, which was later named the Family Service America (FSA).