Chief Minister Green House Scheme CMGHS
முதலமைச்சரின் (சூரியமின்சக்தியுடன் கூடிய) பசுமை இல்லத் திட்டம்
தமிழ் விளக்கம்
முதலமைச்சரின் பசுமை இல்லத் திட்டம் - கிராம ஊராட்சிகளில் வறுமைக் கோட்டிற்கு கீழ்வாழும் வீடற்ற அல்லது பாதுகாப்பில்லாத (கூரை வீடுகள்) வீடுகளில் வாழும் குடும்பங்களுக்கு வீட்டு வசதியை ஏற்படுத்திக்கொடுக்க, 300 சதுர அடி பரப்பளவில், 1.80 இலட்ச மதிப்பீட்டில், சூரியமின்சக்தியுடன் கூடிய பசுமை வீடுகள் கட்டித்தர, 2011-12 நிதியாண்டில் தமிழக அரசால், தமிழக முதல்வரின் பெயரால் செயல்படுத்தப்பட்ட திட்டம். இத்திட்டத்திற்கு மத்திய அரசின் நிதி உதவியை எதிர்பாராமல் முழு நிதிப்பொருப்பும் மாநில (தமிழக) அரசு ஏற்றுக்கொண்டுள்ளது. ஆண்டொண்டிற்கு 60000 ஆயிரம் வீடுகளாக, ஐந்தாண்டுகளுக்கு கட்டிமுடிப்பதாக உத்தேசிக்கப்பட்டுள்ளது.
வீடு கட்டுவதற்கான நிதி ஒதுக்கீட்டில் 30000 ரூபாய் சூரிய சக்தி மின் அமைப்பு ஏற்படுத்துவதற்கும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் 90 திறன்சாரா மனிதசக்தி நாட்களுக்கான சம்பளத்தொகையாக 16470 ரூபாயும், கட்டுமான பொருட்கள் மாற்றும் இதர செல்வினங்களுக்காக ஆகும் செலவினங்களும் வரையறை செய்யப்பட்டு இத்திட்டம் அமுல்படுத்தப்படுகிறது.

English
Tamil Government had ordered for construction of 60,000 Solar Powered Green Houses of 300 square feet each, every year for the next five years commencing from 2011-12 at a unit cost of Rs.1.80 lakhs per house, is another milestone in the history of rural housing which clearly addresses the shelter needs in rural areas. It is claimed by the TN government that nowhere in India is such a free housing scheme for the construction of houses with an area of 300 sq.ft with solar powered lighting implemented.