child advocacy
குழந்தைகளின் நலனுக்காக / உரிமைகளுக்காக வாதிடுபவர்
தமிழ் விளக்கம்
குழந்தைகளின் உரிமைகளை முன்னெடுப்பதன் மூலம் அவர்களைத் தவறான வழியில், தன்னலத்தேட்டத்துடன் நடத்துவதிலிருந்து மீட்டு, அவர்களின் முழுத்திறனும் பரிணமிப்பதற்கான வாய்ப்புக்கள் உருவாக்கத் தொடர்ந்து மன்றாடுதல். சமூகப்பணி தொழில்முறையாக உருவெடுக்கத் தொடங்கிய காலம் முதல், சமூகப்பணியாளர்கள் குழந்தைத் தொழிலுக்கு எதிரான சட்டமியற்றுவதிலும், குழந்தைகளைப் பராமரிக்கப் போதுமான வசதிகளும் பராமரிப்பகங்களும் இல்லாததைப் பொதுமக்கள் கவனத்திற்குக் கொண்டுசென்றும், சிறார்களுக்கான நீதிமுறைகள் உருவாகவும், குழந்தைகளுக்கான வளர்ப்பில்லங்கள் மற்றும் மகவேற்பு (foster care and adoption care) முறைகளை விரிவாக்கவும், குழந்தைகளைக் கடத்துதல் போன்ற செயல்களுக்கெதிராக ஆர்வம் காட்டி பணியாற்றி வந்துள்ளனர்.
English
Championing the rights of children to be free from abuse or exploitation by others and to have opportunities to develop toward their full potential. Since the beginning of their existence, social workers have led in this effort by fighting for child labor laws; calling public attention to inadequate care facilities and orphanages; and working to set up juvenile justice programs, to expand foster care and adoption care, and to eradicate child snatching, kidnapping, and child abuse.