child care worker
குழந்தைப் பாராமரிப்புப் பணியாளர்
தமிழ் விளக்கம்
பராமரிப்பகங்களில் தங்கியிருக்கும் குழந்தைகளின் அன்றாடத் தேவைகளைக் கவனித்து போஷிக்கும் பொறுப்பிலுள்ள தொழில்முறை சார்ந்த பணியாளர்களும் அவர்தம் துணையாட்களும் இந்த வகைப்பாட்டில் அடங்குவர். இல்லப் பெற்றோர்கள், உடனுறைப் பணியாளர்கள், குழுவாழ்க்கை வழிகாட்டிகள், பாதுகாவலர்கள், இல்லப் பாதுகாவலர்கள் என்று பலபெயர்களில் இவர்கள் அழைக்கப்படுகின்றனர். இவர்கள், உளப் பாதிப்படைந்தவர்கள், ஆதரவற்ற குழந்தைகள், மனவளர்ச்சி குன்றிய குழந்தைகள், ஊனமுற்ற குழந்தைகள், திருமணமாகமல் குழந்தை பெற்ற பெண்கள், இளங்குற்றவாளிகள் சீர்திருத்த இல்லங்கள் என்று நிறுவனமயப்படுத்தப்பட்ட குழந்தைப் பாராமரிப்பகங்களில் பணியாற்றுபவர்கள்
English
A professional or paraprofessional who is responsible for the daily care and nurturance of a group of youngsters who reside in an institution. Such workers are often known as houseparents, residential workers, or group-living counselors. They fulfill the activities of institutional child care and are employed primarily in residential-care facilities for emotionally disturbed and dependent children and for people who are mentally retarded, in corrections facilities, in institutions for people with disabilities, and in homes for unwed mothers.