child custody
குழந்தைகளைப் பாதுகாப்புப் பொறுப்பில் வைத்திருத்தல்
தமிழ் விளக்கம்
பெற்றோர்கள் பிரிய நேரிடும் போது அவர்களில் யார் குழந்தையின் பராமரிப்பிற்கும் பாதுகாப்பிற்கும் பொறுப்பானவர் எனபதைத் தீர்மானிக்கும் நீதிமன்றத் தீர்ப்பு. பொதுவாக, ஒரு குழந்தையின் இயற்கைப் பெற்றோர்கள் (உயிரினப் பெற்றோர் - biological parents) குழந்தைகளின் பராமரிப்பு பற்றி முடிவெடுக்க உரிமை உள்ளவர்கள் என்றாலும், கணவன் மனைவி உறவுகள் பிரச்சனைக்குள்ளாகும் போதோ, பெற்றோர்கள் தங்கள் நடத்தையால் பாதுகாவலராக இருக்கும் தகுதியை இழக்கும் போதோ, அவர்களின் பராமரிப்பைப் பற்றி முடிவெடுப்பதை அரசு நீதிமன்றத்திடம் ஒப்படைக்கின்றது.
English
See custody of children.