child guidance

குழந்தைகளை வழி நடத்துதல்

தமிழ் விளக்கம்

இளைஞர்களின் முடிவெடுக்கும் திறனை வளர்த்து, அவர்கள் வாழ்க்கைக்கு உகந்த முடிவுகள் எடுக்கவும், அவர்களின் நடத்தைகளை நல்வழிப்படுத்தி, பிரச்சனைகளைத் தீர்க்கவும் வழிகாட்டும் செயல். இளைஞர்கள் கல்வியைப் பற்றி திட்டமிடவும், அவர்கள் கற்பதிலும், அவர்களுக்குக் கல்விக்கூடத்தில் ஏற்படும் பிரச்சனைகள் பற்றியும், கல்வி உதவித்தொகை, குடும்பப் பிரச்சனைகள் பற்றி தெளிவு பெற தகவல்களைத் தந்துதவுவதும், தேவைப்படும் தகவல்களைப் பெற்றுக்கொள்ள, கல்வித் துறை அனுபவமுள்ள உளவளத் துறை நிபுணர்கள் உதவி செய்வார்கள். மேலும் இளைஞர்களை உளப்பரிசோதனை, ஆளுமைப் பரிசோதனை, தொழில் நாட்டச் சோதனைக்கு உட்படுத்தி அதனடிப்படையில் இளைஞர்களுக்கு முறையாக வழிகாட்டுவர்.

English

The process of helping youths make optimal life decisions, develop decision-making skills, channel behaviors appropriately, and solve their problems. The guidance counselor, usually a person with a specialized background in education, provides youths with necessary information or access to that information. Special focus is on educational planning, academic and relationship problems, scholarships, and family problems. Counseling and testing (especially in terms of aptitude, vocational, and personality factors) are major activities. See also achievement tests.