child labor

குழந்தைத் தொழிலாளி

தமிழ் விளக்கம்

குழந்தைப் பருவத்தை 14 முதல் 18 வயது வரை ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு விதமாகவும், வேலையின் தன்மையைப் பொறுத்து பலவாறாக வரையறை செய்கின்றார்கள். சட்டத்த்தால் நிர்ணயிக்கப்பட்ட இந்த வயதைவிடக் குறைவான வயதுள்ளவர்களிடம் கூலி கொடுத்தோ, கட்டாயப்படுத்தியோ வேலைவாங்குவதை குழந்தைத் தொழில் என்கின்றனர். சர்வதேசத் தொழிலாளர் அமைப்பும், ஐ.நா.சபையின் குழந்தை உரிமைகள் பிரகடனமும் குழந்தைத் தொழிலாளர் முறையைக் கீழ்க்கண்டவாறு வரையறுக்கின்றது.
குழந்தைகளிடமிருந்து அவர்களின் குழந்தைப் பருவத்தைப் பறிக்கும், அவர்களுடைய திறமை, கண்ணியம் மற்றும் அவர்களின் உடல், மனவளர்ச்சிக்கு தடையாக உள்ள எந்தச் செயலிலும் குழந்தைகளை ஈடுபடுத்தினாலும், ஈடுபாட்டாலும் அவர்களைத் குழந்தைத் தொழிலாளர் எனலாம். குழந்தைத் தொழிலாளி முறை என்பது 1. குழந்தைகளின் உடல், மன, சமூக மற்றும் அறவளர்ச்சிக்கு ஆபத்தானது 2. அது அவர்கள் பள்ளியில் சென்று கல்வி கற்கத் தடையாகவும், பள்ளிப் படிப்பை இடை நிறுத்தம் செய்யும்படியாயும் சூழலை ஏற்படுத்துகின்றது 3. அவர்கள் பள்ளிக்குச் சென்றாலும், குழந்தைகளால் தாங்க முடியாத வேலைச்சுமையை அவர்கள் மீது திணிக்கின்றது.

English

Paid or forced employment of children who are younger than a legally defined age. The minimum age for employment may vary from ages 14 to 18 depending on the nature of the work and the child labor standards of the country in which it takes place. The International Labor Organization (ILO) and the U.N. Convention on the Rights of the Child consider child labor to be exploitative when the work or conditions are harmful to the child's health or physical, mental, spiritual, moral, and social development. In the United States, child labor standards were established in 1938 by the Fair Labor Standards Act. Social worker Grace Abbott, as director of the Children's Bureau, led the fight for such standards. See also apprenticing and Rights of the Child Convention.