child labour
குழந்தைத் தொழிலாளர்
தமிழ் விளக்கம்
1. குழந்தைகளின் குழந்தைப் பருவ வளர்ச்சியிலோ அல்லது செயல்பாட்டிலோ தலையிடுகின்ற, குழந்தைகளுக்கு ஆபத்தை விளைவிக்கின்ற, குழந்தைப் பருவ உடல் மற்றும் மன வளர்ச்சிக்குத் தடையாக உள்ள வேலையிலோ அல்லது அவர்களின் திறனை, கண்ணியத்தைப் பறிக்கும் வேலையிலோ, மற்றும் குழந்தைகள் பள்ளி செல்லத் தடையாக உள்ள, அல்லது பள்ளியில் குழந்தைகளின் திறனைப் பாதிக்கின்ற வேலையிலோ குழந்தைகள் தொடர்ந்தோ அல்லது பகுதி நேரமாகவோ ஈடுபடுவதை குழந்தைத் தொழிலாளர் முறை என்று சர்வதேச தொழிலாளர் அமைப்பு வரையறுத்துள்ளது. 2. யுனிசெப் குழந்தை தொழிலாளரை வித்தியாசமாக வரையறுக்கிறது. 5 முதல் 11 வயதுள்ள குழந்தை, ஒரு வாரத்தில் குறைந்தது ஒரு மணி நேர பொருளாதார செயல்பாடு அல்லது 28 மணி நேரம் வீட்டு வேலை, 12 முதல் 14 வயதுள்ள சிறார், ஒரு வாரத்தில் 14 மணி நேர பொருளாதார செயல்பாடு அல்லது 42 மணி நேரம் வீட்டு வேலை செய்தால் அவர்களைக் குழந்தை தொழிலாளர் என வரையறுக்கிறது. 3. குழந்தைகளுடைய சுகாதார மற்றும் தனிப்பட்ட வளர்ச்சியைப் பாதிக்காத அல்லது குழந்தைகளின் கல்வியில் தலையிடாத வேலையில் பங்கேற்கும் குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினர், குழந்தை தொழிலாளர் அல்ல என்றும் மாறாக வீட்டில் பெற்றோருக்கு உதவுதல், குடும்பத் தொழிலில் உதவி அல்லது பள்ளி நேரத்திற்கு வெளியே மற்றும் விடுமுறையில் கைப்பணம் ஈட்டும் செயல்கள், குழந்தைகள் திறமை மற்றும் அனுபவம் பெற்று அவர்களது முதிர் வயது வாழ்வில் சமூகத்தின் ஆக்கப்பூர்வமான உறுப்பினர்களாக தயார்படுத்தி கொள்ள உதவும் என்று சர்வதேசத் தொழிலாளர் அமைப்பு (ILO) நேர்மறையாகக் கருதுகிறது. 4. இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு (2001) அலுவலகம், 17 ஆண்டுகள் குறைவான வயதுடைய ஒரு குழந்தை பொருளாதார உற்பத்தி நடவடிக்கைகளில் இழப்பீடு, ஊதியம் அல்லது இலாப பங்கு பெற்றோ அல்லது பெறாமலோ பங்கேற்றால், அவர்களை குழந்தைத் தொழிலாளர் என வரையறுக்கிறது. இத்தகைய பங்கு உடல் அல்லது மன அளவில் இருக்கலாம். மேலும் இந்திய அரசு, வருடத்திற்கு 6 மாதங்கள் அல்லது அதற்கு மேல் வேலை செய்யும் குழந்தைகளை முதன்மைத் தொழிலாளர்கள் எனவும், ஆண்டில் எந்த நேரத்திலும் ஆனால் 6 மாதங்களுக்கு குறைவாக வேலை செய்பவர் குறு குழந்தைத் தொழிலாளர்கள் எனவும் வகைப்படுத்தியிருக்கின்றது. 5. வளர்ச்சியடைந்த பல நாடுகளில் குழந்தைத் தொழிலாளரின் வயது மாறுபட்டதாக உள்ளது. பள்ளி வேலை மற்றும் வீட்டு வேலை தவிர பிற வேலைகளுக்கு குழந்தைகளைப் பணியமர்த்தக்கூடாதெனவும், குறிப்பிட்ட வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளைக் கண்டிப்பாக பணியமர்த்தக்கூடாதெனாவும் வளர்ச்சியடைந்த நாடுகள் கூறுகின்றன. குழந்தைத் தொழிலாளர் வயது வரையறை ஒவ்வொரு நாட்டிற்கும் மாறுபடுகிறது. 16 வயது நிறைவு பெறுவதற்கு முன்பாக குழந்தைகளைப் பணியில் அமர்த்தக்கூடாதெனவும், பெற்றோரின் சம்மதமில்லாமல் குழந்தைகளை வேலைக்கு அனுமதிக்கக்கூடாது எனவும், ஐக்கிய நாடுகள் சபையின் குழந்தைத் தொழிலாளர் சட்டம் வரையறை செய்துள்ளது.
English
Child labour refers to the employment of children in any work Child Labour is the practice of having children engage in economic activity, on part- or full-time basis that deprives children of their childhood, interferes with their ability to attend regular school, and that is mentally, physically, socially or morally dangerous and harmful. This practice is considered exploitative by many international organisations. Legislation across the world prohibit child labour. These laws do not consider all work by children as child labour; exceptions include work by child artists, family duties, supervised training etc. Poverty, lack of good schools and growth of informal economy are considered as the important causes of child labour in India. The 1998 national census of India estimated the total number of child labour, aged 4–15, to be at 12.6 million, out of a total child population of 253 million in 5–14 age group.