Child Labour (Prohibition and Regulation) Act, 1986

குழந்தைத் தொழிலாளர் (தடை மற்றும் ஒழுங்குமுறை) சட்டம் 1986

தமிழ் விளக்கம்

குழந்தைத் தொழிலாளர்களின் பணித்தன்மையையும் வேலை நேரத்தையும் ஒழுங்குபடுத்த பல்வேறு சட்ட விதிகள் 1881 லிருந்து இந்தியாவில் நடைமுறையில் இருந்தாலும், 1986 ஆம் ஆண்டு அமுலுக்கு வந்த குழந்தைத் தொழிலாளர் (தடை மற்றும் ஒழுங்குமுறை) சட்டமும் அதன் திருத்தங்களும் (1910, 1916) சர்வதேச தொழிலாளர் அமைப்பின் வரையறைகளுக்கேற்பவும், இலவச மற்றும் கட்டாய கல்விச் சட்ட வரையறைகளுக்கு இணங்க உருவாக்கப்பட்டது. இச் சட்டத்தின்படி 14 வயதிற்குட்பட்ட குழந்தைகள், தங்களின் குடும்பத் தொழில் தவிர ஆபத்தானதென்று பட்டியிலடப்பட்ட தொழில்கள் அல்லது வேலைகளில் ஈடுபட தடை விதிக்கப்பட்டது. அனுமதிக்கப்பட்ட பணிகளில் குழந்தைத் தொழிலாளர்களுக்கான பணித்தன்மை ஒழுங்கு படுத்தப்பட்டது. 14 -18 வயதுடைய இள வயதினர் சில வேலைகளில் பணியிலமர்த்தப்பட தடை செய்யப்பட்டது. எது குழந்தைகளுக்கு அபாயமானது அல்லது இடர் விளைவிக்கும் வேலைகள் என்று தீர்மானிக்கவும் அதை அவ்வப்பொழுது திருத்தி அமைக்கும் அதிகாரத்தையும் இந்திய அரசுக்கு வழங்கியது. குழந்தைத் தொழிலாளர்களை பணியிலமர்த்தும் நிறுவனங்களுக்கான அபராதமும், சிறைத் தண்டனையும் அதிகமாக்கப்பட்டு, கடுமையாக்கப்பட்டது.

English

The Child and Adolescent Labour (Prohibition and Regulation) Act of 1986: The Act prohibits the employment of children below the age of 14 years in hazardous occupations identified in a list by the law. ... Further, adolescents between 14–18 years will not be allowed to work in hazardous industries and processes.