child protective services (CPS)
குழந்தைகளுக்கான பாதுகாப்பு சேவைகள்
தமிழ் விளக்கம்
ஒரு குழந்தையின் பாதுகாவலரால் வழங்கப்படமுடியாத சமூக, மருத்துவ, சட்ட, தங்குமிட மற்றும் பாதுகாப்புச் சேவைகள் இதிலடங்கும். அரசு நிறுவனங்களில் பணியாற்றும் சமூகப்பணியாளர்கள், சட்ட அமலாக்க அதிகாரிகளுக்கு, உதவி தேவைப்படும் குழந்தைகளைக் கண்டறிந்து தெரிவிக்கவும், குழந்தைகளுக்குத் தேவைப்படும் உதவிகளைப் பெறவும், தாங்களே செய்து தரவும் முயல்கின்றனர். குழந்தைகள் புறக்கணிக்கப்படும் போதும், அவர்கள் நெறியற்ற வழியில் நடத்தப்படும்போதும் அதை விசாரித்து, உரிய பரிந்துரைகளோடு சட்ட அதிகாரிகளிடமோ, சமூகநலத் துறையினரிடமோ சமர்ப்பிக்கின்றனர். குழந்தைப் பாதுகாப்பு சேவைகள் மூலமாகத் தங்குமிட வசதிகளும், சமுதாயக் கண்காணிப்பு வசதியும் செய்து தரப்படுகின்றது.
English
Human services, often including social, medical, legal, residential, and custodial care, which are provided to children whose caregiver is not providing for their needs. Social workers who work in units of government agencies often help legal authorities with investigations to determine if children are in need of such services, help children get services when needed, and may provide such services themselves. Social workers investigate alleged abuse and neglect and make assessments and recommendations to legal or social welfare authorities. CPS also include the related shelter services and community supervisor services. See also adult protective services (APS).