childhood
குழந்தைப் பிராயம், பிள்ளைப்பருவம்
தமிழ் விளக்கம்
இது மனித வளர்ச்சிப் பருவங்களில் தொடக்கப்பருவம். இப்பருவம் விரைவான உடல்வளர்ச்சியோடும், விளையாட்டு மற்றும் கல்வியின் மூலமாக வயது வந்தவர்களின் செயல்களையும் பொறுப்புகளையும் பாத்திரப்படுத்துவதோடும் தொடர்புபடுத்தப்படுகின்றது. வளர்ச்சி கண்ணோட்ட உளவியலாளர்கள் இந்தப் பருவம் சிசுப்பருவத்தை அடுத்துத் தொடங்கி, பூப்படையும் வரையோ அல்லது இளமைப்பருவம் தொடங்குவது வரையோ நீடிக்கிறதென்கிறார்கள். இருப்பினும் இப் பருவத்துக்கான வயதெல்லை எல்லாப் பண்பாடுகளிலும் ஒரே அளவாகக் கருதப்படுவதில்லை. வளர்ச்சியை மேலும் தெளிவாகப் புரிந்து கொள்வதற்கு ஏற்றபடி இப்பருவம் 1.பச்சிளங்குழந்தை / சிசுப் பருவம் (Infant stage o முதல்1 ஆண்டு) 2. குறுநடைப் பருவம் - தவழும் பிராயம் (Toddler stage 1-3 வயது வரை) 3. விளையாட்டுப் பிள்ளை / பள்ளி முன் பருவம் (Play age/early childhood - 3 முதல் 6 ஆண்டுகள்) 4. பள்ளிப் பருவம் - (school age- middle childhood 6 முதல் 10 ஆண்டுகள்) 5. குமரப் பருவம் - (adolescence (puberty through post-puberty10 முதல் 20 ஆண்டுகள்) என்று பகுக்கப்பட்டிருக்கின்றது.
English
The early stage in the human life cycle characterized by rapid physical growth and efforts to model adult roles and responsibilities, mostly through play and formal education. Many developmental psychologists say this stage occurs after infancy and lasts until puberty (that is, from about 18 to 24 months to 12 to 14 years) or until adulthood (18 to 21 years). This stage is sometimes divided into early childhood (from the end of infancy to about age six) and middle or late childhood (from age six to, or through, adolescence).