childhood disintegrative disorder

குழந்தைப் பருவத்தில் ஏற்படும் பழக்க வழக்கங்கள், தகவமைப்புத் திறன்கள், தன்மையச் சீர்கேடுகள்

தமிழ் விளக்கம்

இது குழந்தைப் பருவத்தில் வரும் வளர்ச்சி தொடர்புடைய, நிறப்பிரிகை (Spectrum disorder) வகையிலான ஐந்து (ஆட்டிசம், autism, அஸ்பெர்ஜெர் கோளாறு Asperger's Disorder, PDD- NOS கோளாறு, குழந்தைப்பருவ தன்மைய சீர்கேடு, Childhood Disintegrative Disorder, ரெட்ஸ் அறிகுறி Retts Syndrome) நோய்களில் ஒன்று. நிறப்பிரிகை வகை நோயென்றால் அந்த நோயினால் பாதிக்கப்படுபவர்கள் எல்லாம் ஒரே மாதிரியோ, ஒரே அளவிலோ பாதிக்கப்படுவதில்லை. ஒரு குழந்தை பிறந்து இயல்பான வளர்ச்சியை அடைந்து இரண்டாண்டுகளுக்குப் பின்னர் அக்குழந்தையின் வளர்ச்சியில் ஏற்படும் பின்னடைவு. 2 வயது தொடங்கி 10 வயதிற்குள் ஒரு குழந்தை தான் பெற்ற திறன்களையெல்லாம் (பேசுவதில், பழகுவதில், பிறருடன் ஒத்துப்போவதில்) படிப்படியாக இழந்து, அந்தத் திறணிழப்பே வாழ்நாள் முழுதும் நீடிப்பது இது தியோடர் கெல்லர் (Theodor Heller 1869 – 1938) )என்ற ஆஸ்திரியக் கல்வியாளரால் அடையாளம் காணப்பட்டதால் அவர் பெயரிலே கெல்லரின் நோய்க் குறித்தொகுப்பு (syndrome) என்றழைக்கப்படுகின்றது.

English

A developmental disorder characterized by a marked regression in the child's development after more than two years of apparently normal development. After age two and before age 10, the child loses previously acquired communication skills, social relationships, and adaptive behavior and exhibits behavior generally observed in autistic disorders. The loss of skills eventually reaches a plateau and minimal improvement may occur; however, the difficulties remain relatively constant throughout life.