Children's Defense Fund (CDF)
குழந்தைகள் பாதுகாப்பு நிதியம்
தமிழ் விளக்கம்
எந்தக் குழந்தையையும் பின் தங்க விட்டுவிடலாகாது என்ற நோக்கத்துடன் மரியன் ரைட் ஈடில்மேன் என்பவரால், 1973 ஆம் ஆண்டு அமெரிக்காவில் ஆரம்பிக்கப்பட்ட குழந்தைகள் நலனுக்கான தொண்டு நிறுவனம். குழந்தைகள் பால் கரிசனமுள்ள பெற்றோர்கள், சமூகங்கள் மற்றும் கொள்கைகளை உருவாக்குவதன் மூலம், குழந்தைகள் வறுமையற்றும், வன்முறைக்கு உள்ளாகமலும், புறக்கணிக்கப்படாமலும், தரமான கல்வி மற்றும் மருத்துவ வசதி பெறவும், நன்னடத்தைக்கான ஆன்மீக அடித்தளமிடவும் இந்நிறுவனம் செயல்பட்டு வருகின்றது.
English
An advocacy and lobbying organization on behalf of the nation's children that scrutinizes regulations and legislation affecting children and also proposes new and modified programs. It strives to create and enforce child welfare laws and to support organizations that serve the special needs of children.