chlamydia

கிளாமீடியா என்ற கிருமியால் ஏற்படும் பால்வினை நோய்

தமிழ் விளக்கம்

கிளாமீடியா என்பது “நீர்க்கடுப்பு” வியாதி. இந்த நோயைக் கொடுக்கும் கிருமிக்கு கிளாமிடியா டிராக்கோமேட்டீஸ் என்று பெயர். விலைமாதர் உடல் உறவாலும் இந்நோய் வரும். விதை மேவிக் குழாயையும் தாக்கி அழற்சி ஏற்படுத்தும். இந்நோய்க்கான அறிகுறிகள் எதுவும் இல்லாத போதும், ஆண்களுக்குச் சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல் உணர்ச்சி தென்படும். பெண்களைப் பொறுத்தவரை இந்நோயால் பெரிய ஆபத்து யாதெனில், இடுப்பில் வீக்கம் ஏற்பட்டு, சூலகங்களிலிருந்து கருப்பைக்கு கரு முட்டைகளை எடுத்துவரும் குழாய்கள் அடைபடுகிறது. இதனால் மலட்டுத் தன்மை ஏற்படுகிறது. அதோடு கருப்பைக்கு வெளியே கருவுண்டாகிறது. கருவில் வளரும் குழந்தை, கருப்பைக்கு சூலகங்களிலிருந்து வரும் முட்டை எடுத்துவரும் குழாயில் நாட்டப்பட்டு வளர்கிறது. அதாவது கருப்பையிலிருந்து வெகுதூரத்தில் வளருகிறது. இப்படிப்பட்ட நிலை ஏற்பட்டால் அவசரமாகச் அறுவைச் சிகிச்சை செய்யப்படல் வேண்டும். இல்லையேல் குழாய்க்குள் குழந்தை வளர்ந்து வந்தால் குழாய் வெடித்துப் போக ஏதுவாகும். கிளமீடியா இருப்பதாகச் சந்தேகம் எழுந்தால் பாலியல் உறவு கொண்ட ஆண் - பெண் இருவரும் வைத்திய சிகிச்சைக்கு உட்படுத்தப்பட வேண்டும்.

English

One of the sexually transmitted diseases (STDs) caused by nongonococcal (not gonorrhea) organisms. Symptoms are similar to those of gonorrhea and are equally severe in women but usually less severe in men. In women, symptoms include inflammation in the pelvic region, scarring of tissue, and sometimes sterility; in men, they include inflammation in the urethra and prostate gland. Babies born to infected women can develop pneumonia and eye infections. Often no symptoms are evident until the disease has advanced to more-serious levels. Early treatment of the infected person and partner with antibiotics is usually successful.