Choice in Dying

மரணத்திற்கான விருப்புரிமை

தமிழ் விளக்கம்

குணப்படுத்த முடியாத வியாதிகளால் அந்திம காலத்தை நெருங்குபவர்கள் கருணையோடும், கண்ணியத்தோடும் நடத்தப்பட வேண்டுமென்பதற்காகத் துவக்கப்பட்ட தேசிய அளவிலான தொண்டு நிறுவனம். மரிக்கும் தருவாயில் இருப்பவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தாரின் தேவைகளைப் பற்றி பொதுமக்களுக்கும், மருத்துவப்பணியில் ஈடுபட்டுள்ளோருக்கும், கொள்கை வரைவாளர்களுக்கும் எடுத்துக் கூறுகின்றது. மரிப்பவர்களைப் பற்றிய அக்கறைக்கான அமைப்பும், மரிப்பதற்கான உரிமை அமைப்பும் இணைந்து 1991 இல் மரணத்திற்கான விருப்புரிமை அமைப்பாக மாறியது. வதையில்லா மரணம் என்ற அமைப்புடன் இணைந்து வாழும் விருப்பத்திறக்கான சாசனம் என்ற பெயரில், தன்னால் முடிவெடுக்க இயலாதபோது தனக்கு எப்படி சிகிச்சை அளிக்கப்படவேண்டும் என்ற முடிவை எடுப்பதைச் சட்டபூர்வமாக்கியது. ,

English

A national, not-for-profit organization dedicated to advocating for the rights of people to make their own decisions about medical care and to receive compassionate and dignified care at the end of life. The organization educates the public, health care providers, and policy-makers about the needs of dying patients and their loved ones, and it provides free advance directives and counseling. Choice in Dying was created in 1991 by the merger of Concern for the Dying (CFD) and Society for the Right to Die. The society, under the aegis of the Euthanasia Society and the Euthanasia Educational Fund, pioneered the living will in 1967.