cholera
(கொடிய) வயிற்றுப்போக்கு நோய், வாந்திபேதி நோய், மாசுபட்ட தண்ணீர் மூலம் பரவக் கூடிய வாந்தி, தாகம், மற்றும் கட்டுப்பாடில்லாத வயிற்றுப்போக்கு நோய்
தமிழ் விளக்கம்
காலரா அல்லது வாந்திபேதி என்பது, விபிரியோ காலரா (Vibrio cholerae) எனப்படும் பாக்டீரியாவினால் உண்டாகும் தொற்றக்கூடிய குடலழற்சி (gastroenteritis) நோய் ஆகும். இப் பக்டீரியாவைக் கொண்ட உணவு அல்லது நீரை அருந்துவதன் மூலம் இந் நோய் மனிதருக்குத் தொற்றுகிறது. இந் நோயை உண்டாக்கும் பக்டீரியாக்களைத் தேக்கி வைத்திருப்பது மனித உடலே என்று முன்னர் பெரும்பாலும் நம்பப்பட்டது. ஆனால் நீர்சார் சூழலும் விபிரியோ காலரே என்னும் பக்டீரியாவைத் தேக்கி வைத்திருக்கக்கூடும் என்பதற்கான சான்றுகள் இப்போது அறியப்பட்டுள்ளன. ‘விப்ரியோ’ நோய்க் கிருமிகள் தொற்றிய நீர் அல்லது உணவுப் பண்டங்களை உட்கொள்ளுவதால் காலரா நோய் ஏற்படுகிறது. பொதுவாக ஒருவருக்கு இந்நோய் உண்டானால், அவரது மலத்தில் இருந்து வெளியேறும் ஆயிரக்கணக்கான ‘விப்ரியோ’ கிருமிகள் மூலம் பிறருக்கு இந்நோய் பரவுகிறது. பராமரிக்கப்படாத சாக்கடைகள், சுத்திகரிக்கப்படாத குடிநீர் மூலம் இந்நோய் அதி வேகமாகப் பிறருக்கு பரவும். உப்புகலந்த ஆறு மற்றும் கடல்நீர், பன்றியிறைச்சி நண்டு போன்றவற்றை நன்கு சமைக்காமல் அப்படியே சாப்பிடுவது காலரா வருவதற்கு வழிவகுக்கும். ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு இது நேரடியாகத் தொற்றக்கூடிய நோய் அல்ல. எனவே காலரா நோய் பாதிக்கப்பட்டவரிடம் பேசுவதாலோ அல்லது பழகுவதாலோ எவ்வித பாதிப்பும் ஏற்படாது. விபிரியோ காலரா பாக்டீரியா சிறுகுடலில் உள்ள இழைமத்தைத் தாக்கி, இந் நோயின் முக்கிய இயல்பான பெரும் வயிற்றோட்டத்தை ஏற்படுத்துகிறது. ஏறத்தாழ பாதிக்கப்பட்ட 20 நபர்களில் ஒருவருக்குக் கடுமையான பாதிப்பு ஏற்படுகின்றது. பாதிக்கப்பட்டவரின் உடலில் உள்ள நீரும், மற்ற சத்துப்பொருள்களும் அதிக அளவு வெளியேறுவதால், “நீர்க் குறைவுவும்” அதைத் தொடர்ந்து குருதிக்குறை அழுத்தமும் ஏற்பட்டு, உடலை வலுவிழக்கச் செய்துவிடும். அவசர சிகிச்சை அளிக்கப்படவில்லை என்றால், சில மணிநேரங்களில் மரணம் உண்டாகவும் வாய்ப்பு உள்ளது.
English
An epidemic disease spread through polluted water resulting in such symptoms as diarrhea, vomiting, thirst, and cramps.